Advertisment

சூரிய காந்தி மலருடன் உக்ரேனியர்கள்..! பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணை.. முக்கிய உலக நிகழ்வுகள்

புஷ்கின் ஸ்கொயரில் ஒன்று கூடலாம் என்பதை ரகசியமாக சக போராட்டக்காரர்களுக்கு உணர்த்த இந்த எமோஜிக்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

author-image
WebDesk
New Update
சூரிய காந்தி மலருடன் உக்ரேனியர்கள்..! பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணை.. முக்கிய உலக நிகழ்வுகள்

உக்ரேனியர்களின் ஹீரோக்கள் தெருவில் ரஷ்ய தூதரகம் உள்ளது என்று பலகை வைத்து ரஷ்ய தூதரக முகவரியை கிண்டலாக மாற்றி லுதுவேனியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த இரு வாரங்களாக போர் புரிந்து வருகிறது. ரஷ்யாவின் கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்றுக் கொள்வதாக உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியபோதிலும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கு இடையே துருக்கி பிரதமர் எர்டோகன் மத்தியஸ்தம் செய்து வருகிறார்.

இந்நிலையில், உலக நாடுகளில் பெரும்பாலானவை ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவிலேயே கூட பொதுமக்களில் ஒரு சாரர் அதிபர் புதினை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில்தான் லிதுவேனியோவின் தலைநகர் வில்னியஸில் ரஷ்ய தூதரகத்தின் முகவரி மாற்றப்பட்டுள்ளது. வில்னியஸ் நகர மேயர் கூறுகையில், லிதுவேனியாவில் உள்ள ரஷ்யத் தூதரக அலுவலக ஊழியர்களுக்கு அளிக்கப்டும் அலுவலக அட்டைகளில் உக்ரைன் வீரர்களை கெளரவிக்கும் வகையில் குறிப்புகள் எழுதித் தரப்படும். இன்று முதல் இந்த நடவடிக்கையை தொடங்கவுள்ளோம் என்றார்.

அமேசான், நெட்ஃபிளிக்ஸ் முதல் சோனி மியூசிக் வரை தடை

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அமேசான், நெட்ஃபிளிக்ஸ் முதல் சோனி மியூசிக் நிறுவனம் வரை தனது சேவையை நிறுத்திக் கொண்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து இந்த நிறுவனங்கள் தங்களது சேவைகளை ரஷ்யாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ஏற்கனவே, பீட்சா ஹட், மெக்டோனல்டு, ஸ்டார்பக்ஸ் போன்ற நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்களது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பதுங்கு குழிகளில் உக்ரைன் தூதரின் பெற்றோர்

உக்ரைனில் எனது பெற்றோர் குண்டு வீச்சுகளுக்கு அஞ்சி பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்று ஆஸ்திரேலியாவுக்கான உக்ரைன் தூதர் விளாடிமிர் ஷ்ல்கிவ்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைன் தலைநகர் கீவில் 70 வயதாகும் எனது பெற்றோர் வெடிகுண்டுகளுக்கு அஞ்சி பதுங்கி குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு எங்களின் ராணுவ வீரர்களுக்கு உணவு தயாரித்து கொடுத்து வருகின்றனர்.

பாக்., எல்லையில் விழுந்த இந்திய ஏவுகணை!

இந்தியா சோதித்த ஏவுகணை எதிர்பாராதவிதமாக பாகிஸ்தானில் விழுந்தது. சோதனைக்காக இந்தியா சார்பில் விண்ணில் ஏவப்பட்ட ஏவுகணை, தங்கள் நாட்டின் எல்லையில் உள்ள மியா சானு என்ற பகுதியில் விழுந்ததாக பாகிஸ்தான் விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எமோஜிகளை பயன்படுத்தும் ரஷ்யர்கள்

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் நடத்தி வரும் வேளையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை ரஷ்ய போலீஸார் ஒடுக்கி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து பின்னர் விடுவிக்கின்றனர்.

மேலும், அவர்களை கண்காணிக்கும் பணிகளிலும் போலீஸார் ஈடுபடுகின்றனர். இதனால், செல்போன்களில் எமோஜிகளை பயன்படுத்தி ரகசியமாக போராட்டக்காரர்கள் ஒன்றிணைகின்றனர். ரஷ்ய கவிஞர் புஷ்கின் உருவம், எண் 7, ஒரு நபர் நடப்பது போன்ற எமோஜிக்களை போராட்டக்காரர்கள் பயன்படுத்துகின்றனர்.

மாஸ்கோ நகரில் உள்ள புஷ்கின் ஸ்கொயரில் ஒன்று கூடலாம் என்பதை ரகசியமாக சக போராட்டக்காரர்களுக்கு உணர்த்த இந்த எமோஜிக்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இதையும் படியுங்கள்: உக்ரைன் மருத்துவமனையில் ரஷ்யா விமான தாக்குதல்; 17 பேர் படுகாயம்

சூர்ய காந்தி பூக்களுடன் உக்ரேனியர்கள்!

உக்ரைனில் ரஷ்யா கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. பொதுமக்களுக்கும் துப்பாக்கிகளை சுட பயிற்சி அளித்து அந்நாட்டு ராணுவம் ஆயுதங்களை வழங்கி உள்ளது.

மிகப் பெரிய ராணுவத்தையும், ராணுவத் தளவாடங்களை தன்னகத்தே வைத்துள்ள ரஷ்யாவுக்கு கடந்த 2 வாரங்களாக பல்வேறு இழப்புகளை சந்தித்த போதிலும் தளராமல் ஈடுகொடுத்து வருகிறது உக்ரைன். அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் மக்கள் சூரிய காந்தி பூக்களை தலையில் சூடியும், கையில் ஏந்தியபடியும் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் நாட்டின் தேசிய மலர் சூரிய காந்தி. எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள போர் அவலத்தை உலகத்துக்கு எடுத்துக் காட்டுவதற்காகவும் உலக நாடுகளின் கவன்ததை ஈர்ப்பதற்காகவும் சூரிய காந்தி மலரை ஏந்திக் கொண்டு உக்ரேனியர்கள் செல்கின்றனர்.

ரஷ்யாவுக்கு எதிராக போராடும்போது சூரிய காந்தி மலரை ஏந்திக் கொள்கின்றனர். நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு அடையாளமாக சூரிய காந்தி மலர் விளங்கி வருகிறது. அந்நாட்டில் அதிகம் சூரிய காந்தி விளையும் என்பது குறிப்பிடத்தக்கது. சூரிய காந்தி எண்ணெயும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்தது நினைவுகூரத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment