Advertisment

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் மக்கள் கடும்பாதிப்பு; குவியும் சர்வதேச உதவிகள்... உலகச் செய்திகள்

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் மக்கள் கடும்பாதிப்பு; குவியும் சர்வதேச உதவிகள்; இந்தியா- அமெரிக்கர்கள் மீதான இனவெறி தாக்குதலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்... இன்றைய உலகச் செய்திகள்

author-image
WebDesk
New Update
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 30 மில்லியன் டாலர் நிதியுதவி; சேகுவாராவின் மகன் மரணம்... உலகச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு உதவும் சர்வதேச நாடுகள்

Advertisment

International aid reaches flood ravaged Pakistan today world news: இந்த கோடையில் 1,000 க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட "அசுரப் பருவமழையால்" உந்தப்பட்ட பரவலான வெள்ளத்தால் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கானோரை வெளியேற்ற இராணுவமும் தன்னார்வலர்களும் தீவிரமாக முயற்சித்த நிலையில், சர்வதேச உதவி திங்களன்று பாகிஸ்தானை அடைந்தது.

இதையும் படியுங்கள்: இனவெறி தாக்குதல்; இந்திய-அமெரிக்கா அமைப்புகள் கண்டனம்… உலகச் செய்திகள்

துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சரக்கு விமானங்கள் ஏழ்மையான பாகிஸ்தானுக்கு உதவ சர்வதேச அவசரத்தைத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்தில் கூடாரங்கள், உணவு மற்றும் பிற அன்றாடத் தேவைகளுடன் தரையிறங்கின.

சர்வதேச உதவிக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்ததையடுத்து, பேரழிவு தரும் வெள்ளத்தை சமாளிக்க பாகிஸ்தானுக்கு உதவ உறுதியளித்த நாடுகளில் அவர்களும் அடங்குவர்.

இலங்கை பட்ஜெட்

சர்வதேச நாணய நிதியத்துடன் பிணை எடுப்பு தொடர்பான கலந்துரையாடல்களுக்கு மத்தியில், நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டில், செவ்வாய்க்கிழமை இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ​​இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே செலவினங்களைக் குறைக்க உள்ளார்.

publive-image

1948 இல் சுதந்திரத்திற்குப் பிறகு, சுற்றுலாவைச் சார்ந்தும், 22 மில்லியன் மக்களையும் கொண்ட இலங்கையின், அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைந்து. இதனால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இதனையடுத்து, ஜூலை மாதம் மக்கள் எழுச்சியில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, இந்த மாத தொடக்கத்தில் ராய்ட்டர்ஸிடம் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் என்று கூறினார்.

இந்தியா- அமெரிக்கர்கள் மீதான இனவெறி தாக்குதலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்

கடந்த வாரம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பெண்கள் மீதான இனவெறி துன்புறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு காரணமான பெண் மீது முழு அளவிலான சட்டத்தின்படி வழக்குத் தொடருமாறு இந்திய-அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, டல்லாஸில் உள்ள காவல்துறையிடம் கேட்டுக்கொண்டார், மேலும், இதுபோன்ற இனவெறி தாக்குதல்கள் இலக்கு வைக்கப்பட்டவர்களை மட்டுமல்ல அவர்களால் பரந்த சமூகங்களையும் பாதிக்கின்றன என்றும் கூறினார்.

publive-image

அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் உள்ள டல்லாஸ் நகரில் மெக்சிகோ-அமெரிக்கா பெண், இந்திய-அமெரிக்கப் பெண்களை இனரீதியாக துஷ்பிரயோகம் செய்து தாக்கியுள்ளார், அவர்கள் அமெரிக்காவை "அழிக்கிறார்கள்", "இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்" என்று அவர்கள் மீது இனவெறி அவதூறுகளை வீசினார்.

"இனவெறி மற்றும் பிற வகை வெறுப்புகளால் தூண்டப்படும் இத்தகைய இனவெறி தாக்குதல்கள் அவர்களால் நேரடியாக குறிவைக்கப்படுபவர்களை மட்டுமல்ல, பரந்த சமூகங்களையும் பயம் மற்றும் ஆபத்தின் சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் பலியாகின்றன" என்று காங்கிரஸ் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pakistan America World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment