Advertisment

வெற்றியை நெருங்கும் பைடன்; தோல்வி பயத்தில் நீதிமன்றத்தை அணுகும் ட்ரெம்ப்!

குறைந்த அளவே வாக்களிக்கும் மக்களை கொண்ட நாட்டிற்கு இது மிகவும் அரிய சாதனை தான் என்கிறார் க்ரீன்.

author-image
WebDesk
New Update
வெற்றியை நெருங்கும் பைடன்; தோல்வி பயத்தில் நீதிமன்றத்தை அணுகும் ட்ரெம்ப்!

 Karishma Mehrotra

Advertisment

Joe Biden inches closer, Trump goes to court crying foul, seeking recount :  வியாழக்கிழமை மாலை வரை (இந்திய நேரப்படி நள்ளிரவு) வெற்றியை உறுதி செய்வதற்கான 270 வாக்குகளில் ஜோ பைடன் 6 எலெக்ட்ரோல் காலேஜ் வாக்குகள் பின்தங்கி இருந்தார். அமெரிக்க அதிபர் 56 வாக்குகள் பின் தங்கி இருந்தார். இருப்பினும் சில இடங்களில் மறு எண்ணிக்கை, எண்ணிக்கையை நிறுத்துதல் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.

அனைத்து வாக்குகளும் எண்ணப்பட வேண்டும் என்று சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. ஆரிஜோனாவின் மரிகோப்பா பகுதியில் 150க்கும் மேற்பட்ட ட்ரெம்ப் ஆதரவாளர்கள் கைகளில் துப்பாக்கியுடன், தபால் வாக்குகள் எண்ணும் இடத்தை சுற்றி நின்றனர். மின்னேபோலீஸ், போர்ட்லேண்ட், ஃபிலடெல்பியா, லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் சிக்காகோ போன்ற இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது.

To read this article in English

முடிவுகள் எட்டப்படாத ஜார்ஜியா, நெவதா, பென்சில்வேனியா, மற்றும் வட கரோலினா மாகாணங்களின் வெற்றியை எதிர்பார்த்த வண்ணம் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நான்கு இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் வெற்றி உறுதி செய்யப்பட்டால் பைடனின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும்.

“பைடன் நிச்சயமாக 270 மேஜிக் எண்ணை தாண்டிவிடுவார். ஆனால் அது இன்றா, நாளையா, அல்லது அடுத்த வாரத்தின் முற்பகுதியில் அறிவிக்கப்பட்டாலோ அவர் வெற்றி பெறுவார் என்பது தான் தெளிவாக தெரிவாகிறது என்று ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் க்றிஸ்டோஃபர் நிக்கோலஸ் கூறியுள்ளார்.

ஜோ பைடனின் சரிவு என்பதற்கான எதிர்பார்ப்புகள் அனைத்தும் தேர்தல் இரவில் பொய்யானது. நவீன அமெரிக்க வரலாற்றில் எந்த ஒரு வேட்பாளரும் பெற்றிடாத அளவிற்கு வாக்குகளை பெற்றுள்ளார் பைடன். தொடர்ச்சியாக நடைபெற்ற 8 தேர்தல்களில் 7 முறை அதிக அளவு பாப்புலர் வாக்குகளை ஜனநாயக கட்சியினர் பெற்றுள்ளனர் ஆனால் எலெக்டோரல் காலேஜ் வாக்குகளில் இரண்டு முறை தோல்வியை தழுவியுள்ளனர் (2000 கோரே, 2016 ஹிலாரி க்ளிண்டன்)

மேலும் படிக்க : அதிபர் மாறினாலும் அமெரிக்க கொள்கைகள் மாறாது; ஏன்?

இந்த தேர்தலில் கவனித்தில் கொள்ள வேண்டியது அதிக அளவில் பதிவான வாக்குகள் தான் என்று கொலாம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அரசியல் ஆய்வாளர் டொனால்ட் பி க்ரீன் கூறியுள்ளார். 160 மில்லியன் அமெரிக்கர்களில் 67% பேர் வாக்களித்துள்ளனர். கடந்த இரண்டு தேர்தல்களைக் காட்டிலும் இந்த தேர்தலில் பிரச்சாரக்குழு அதிகம் செலவிட்டுள்ளது. 1960ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைப் போன்று இந்த தேர்தலிலும் அதிக நபர்கள் வாக்களிப்பார்களா என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போதைய தேர்தல் அதையும் விஞ்சிவிட்டது என்று தான் கூற வேண்டும். குறைந்த அளவே வாக்களிக்கும் மக்களை கொண்ட நாட்டிற்கு இது மிகவும் அரிய சாதனை தான் என்கிறார் க்ரீன்.

ஃப்ளோரிடா மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களில் ட்ரெம்ப் வெற்றியை தொடர்ந்து அரிஸோனாவில் பைடனின் வெற்றியை கஷ்டமாக அறிவித்தது, ட்ரெம்பின் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குள்ளான வலது சார்பு ஃபாக்ஸ் நியூஸ். முன்னாள் துணை அதிபர் விஸ்கான்சின் மற்றும் மிச்சிகன் ஆகிய இடங்களை புதன் நள்ளிரவு (இந்தியாவில் வியாழன் அதிகாலை) வென்றார். இதன் மூலம் ஜனநாயக கட்சியின் கோட்டைகளை வென்றதுடன் 2016ம் ஆண்டு ட்ரெம்பின் வெற்றிக்கு வழி வகுத்த பென்சில்வேனியாவிலும் வெற்றியை பெற்றார் அவர். ட்ரெம்ப் விஸ்கான்சினில் மறு எண்ணிக்கையை கோரினார். அதே போன்று மிச்சிகன், ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய இடங்களில் தோல்வி பயத்தை கருத்தில் கொண்டு வாக்குகளை எண்ணுவது தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார்.

மேலும் படிக்க : மறு வாக்கு எண்ணிக்கை… தபால் வாக்குகளில் சிக்கல்… தொடர் இழுபறியில் தேர்தல் முடிவுகள்!

நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்வோம். நாங்கள் இதில் வெற்றி பெறுவோம். நான் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டேன் என்றே கருதுகிறேன் என்று வெள்ளை மாளிகையில் தேர்தல் இரவன்று கூறினார். வியாழக்கிழமை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “வாக்குகளை எண்ணுவதை நிறுத்துங்கள்... மோசடியை நிறுத்துங்கள்” என்று ட்வீட் பதிவிட்டார்.

”வழக்குகளை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்காவில் வழிமுறைகள் ஏதும் கிடையாது. முதலில் அவர்கள் உள்ளூர் நீதிமன்றங்களையே அணுக வேண்டும். இதுவரையில், ட்ரெம்பின் பிரச்சாரக் குழுவிடம் தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை / தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவிதமான சட்டப்பூர்வ கோரல்களும் இல்லை” என்று கோரேய் கோல்ட்ஸ்டோன் கூறியுள்ளார். Campaign Legal Center-ன் கம்யூனிகேசன் இயக்குநராக பணியாற்றுகிறார்.

இந்த வழக்குகள் எந்த ஒரு உண்மையான நிகழ்வின் அடிப்படையாகவும் இல்லாமல் தேர்தலின் ஒருமைப்பாட்டை கலைக்க முயல்வதாகவே தெரிகிறது. தேர்தலுக்கு முதல் வரை வந்த தபால் வாக்குகளை எண்ணி முடிக்க சில மாகாணங்களுக்கு அதிக நேரம் பிரிக்கும் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக முடிவடைய இந்த நேரத்தில் பொறுமையாக இருப்பது தான் மிகவும் முக்கியம். அனைத்து செல்லுபடியாகும் அஞ்சல் வாக்குகளையும் முறையாக எண்ண வேண்டும். அது முடிந்த பிறகு தான் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்று தெரியும் என கோல்ட்ஸ்டோன் கூறினார்.

மேலும் படிக்க : அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சர்ச்சையில் முடிந்தால் என்ன நடக்கும்?

பைடன் வெற்றி பெறுவதில் நம்பிக்கையை வெளிப்படுத்தினார் ஆனால் முன்பே வெற்றி பெற்றுவிட்டோம் என்று அறிவிப்பதை அவர் தவிர்த்தார். “நீண்ட இரவு வாக்கு எண்ணிக்கையை முடித்த பின்னர், 270 வாக்குகளை பெற அதிக அளவில் வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால் நான் வெற்றியை அறிவிக்க வரவில்லை ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பின்னர், நம்புகின்றேன், நாம் தான் வெற்றி பெற்றிருப்போம் என்று அவர் டெலாவாரில் கூறினார்.

அறிவிக்கப்படாத மாநிலங்களில் வாக்களிக்கப்பட வேண்டிய வாக்குகள் அவரது நகர்ப்புற மற்றும் புறநகர் தளங்களிலிருந்து வருவது மட்டுமல்லாமல், முக்கியமாக ஜனநாயக அஞ்சல் வாக்குகளும் ஆகும் என்பது பிடனுக்கு ஆதரவாகும். ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணப்பட்ட போது ட்ரெம்ப் முன்னணி நிலையில் இருந்து சருக்கிக் கொண்டே வந்தார்.நெவதா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களின் முடிவுகள் வியாழக்கிழமை (இந்தியாவில் வெள்ளிக்கிழமை) வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பைடனின் ஆட்சியில் வர இருக்கும் நிறைகள் குறைகள் பற்றியும் இப்போதே பலரும் பேச துவங்கியுள்ளனர். ஜோசப் கேரி, பைடனின் 1988ம் ஆண்டு பிரச்சாரம் மற்றும் அல் கோரியின் 2000ம் ஆண்டு பிரச்சாரத்திலும் பணியாற்றியவர், “நைட் மேரில் இருந்து நாம் வெளியேறிவிட்டோம். ஆனால் நாம் ஆட்சி செய்ய முடியாது ஏன் என்றால் குடியரசு கட்சியினரால் ஆன செனேட் சபை இருக்கும் என்று கூறினார் அவர்.

னட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் ஜனநாயக நம்பிக்கையை முறியடிக்க GOP போதுமான இடங்களை வென்றுள்ளது; குடியரசுக் கட்சியினரும் பிரதிநிதிகள் சபையில் தங்கள் எண்ணிக்கையை மேம்படுத்தியுள்ளனர். பைடன் வென்றால், பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு பின்னால் காங்கிரஸின் கட்டுப்பாடு இல்லாமல் அதிபர் பதவிக்கு வந்த முதல் ஜனநாயக கட்சி வேட்பாளராக இருப்பார் இருப்பார். "ஒரு குடியரசுக் கட்சி செனட் மூலம், நிர்வாகம் சுகாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றில் முன்னேற விரும்பினால், போதும்... பிரச்சனை இங்கு தான் ஆரம்பிக்கும்... பிடென் உரையாற்ற விரும்பும் முதல் விஷயம் இதுதான், ”என்று கேரி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

குடியரசு கட்சியின் நிக்கோலஸ் “இந்த ஆண்டு யாரும் அவர்களுடைய நிரலில், அதிபர் பதவியை இழப்போம், செனெட் சபையை தக்க வைப்போம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவோம் என்று எழுதவில்லை என்றே நினைக்கின்றேன். பல்வேறு ஜனநாயக கட்சி குழுக்கள் வெள்ளை மாளிகையில் ஏன் பைடனை வைத்திருக்கிறார்கள், ஆனால் ஒரு ஊசியை கூட காங்கிரஸில் நகர்த்தவில்லை என்று குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

மாறுபட்ட வெற்றிகள் நாட்டின் தொடர்ச்சியான பிளவுகளை அடையாளப்படுத்துகின்றன, அவற்றில் சில தீவிரம் அடைந்துள்ளன. முன்னோடியில்லாத வகையில் வாக்களிப்பு ஜனநாயகக் கட்சியினரின் நகர்ப்புற வாக்காளர்களுக்கும் குடியரசுக் கட்சியினரின் கிராமப்புற மக்களுக்கும் இடையில் இன்னும் ஆழமான விரிசலை உருவாக்கியுள்ளது. பொது கருத்துக் கணிப்பு நிறுவனமான பப்ளிக் ஒபினியன் ஸ்ட்ராடஜீஸின் கூற்றுப்படி, கிளின்டனைக் கைவிட்ட நான்-காலேஜ்-எஜூக்கேட்டட் வெள்ளை வாக்காளர்களிடையே பிடென் ஆதாயம் பெற்றார், ஆனால் காலேஜ்-எஜூக்கேட்டட் வெள்ளை வாக்காளர்களிடையே அல்ல. இருப்பினும், வெள்ளை பெண்கள் டிரம்பிலிருந்து விலகி பிடனுக்கு வாக்களித்தனர்.

செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானெல் புதன்கிழமை “ அமெரிக்கா முழுவதும் புறநகர்ப்பகுதிகளில் உள்ள சவால்களைப் பற்றி நாங்கள் மிகவும் அறிந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். பல ஆண்டுகளாக குடியரசுக் கட்சியின் சவாலாக இருந்த மற்ற விஷயம், குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் பாலின இடைவெளி தான் ” என்று கூறினார்.

20% ட்ரெம்ப் வாக்காளர்கள் தங்களின் ஆதரவு குறித்த தகவல்களை தங்கள் நண்பர்களிடம் இருந்து மறைத்ததாக கூறுகின்றனர். அதே நேரத்தில் பைடன் விவகாரத்தில் இது வெறும் 8% ஆகவே இருக்கிறது. AAPI விக்டரி ஃபண்ட் அமைப்பின் தலைவர் சேகர் நரசிம்மனிடம் தேசிய பிளவுகள் பற்றி குறிப்பிட்ட போது, “ஜோ pஐடன் ஒற்றுமையை விரும்புகிறார். அவர் குணப்படுத்துபவர். குடியரசு கட்சியினர் மீண்டும் அதனை தவறவிட்டுவிட்டனர். எங்களின் தீர்வு ஜோ பைடன் மிகவும் சரியான வேட்பாளர் என்பது தான்” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Usa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment