இலங்கை நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய, அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவி வரும் இக்கட்டான கால கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக் கட்சிகள் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என் கடமை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், வருகின்ற வெள்ளிக்கிழமை (02/11/2018) நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சிறிசேனாவிடம் கரு ஜெயசூர்யா வலியுறுத்த இருப்பதாக தெரிய வந்துள்ளது. இலங்கையில் நிலவும் அமைதியற்ற சூழல் மற்றும் ராஜபக்சேவின் பதவியேற்பு குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்களும் தங்களின் கருத்து மற்றும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
வலுவடையும் ராஜபக்சே அமைச்சரவை
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவின் கூட்டணியில் இருந்து விலகியது சிறிசேனாவின் கட்சி. அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார் ராஜபக்சே. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திங்களன்று (29/10/2018) தங்கள் அரசின் கீழ் வரும் அமைச்சரவை மற்றும் அதற்கான அமைச்சர்கள், புதிய செயலாளர்கள் அனைவரும் அதிபர் சிறிசேனாவின் செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த துனேஷ் கங்கந்த அதிபர் சிறிசேனா முன்னிலையில் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அமைச்சர்களின் ஆதரவினை கேட்டிருக்கிறார் ராஜபக்சே. இது தொடர்பாக ரா.சம்பந்தன் மற்றும் ராஜபக்சே இடையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. முழுமையான செய்திகளைப் படிக்க