Kerch Strait Ships Accident : துருக்கி, லிபியா, மற்றும் இந்தியா நாட்டினைச் சேர்ந்த நபர்கள் சென்ற இரண்டு கப்பல்கள் நடுக்கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ரஷ்யா மற்றும் க்ரிமியா நாடுகளுக்கு இடையே இருக்கும் கெர்ச் ஜலசந்தியில் இந்த விபத்து நடைபெற்றது.
அதில் 6 இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடுக்கடலில் வைத்து, ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள்களை பரிமாற்றம் செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
இரண்டு கப்பல்களில் ஒன்றான கேண்டியில் 17 நபர்கள் பயணம் செய்துள்ளனர். அதில் 8 இந்தியர்கள், 9 துருக்கியர்கள் பயணித்தனர். மற்றொரு கப்பலான மாஸ்ட்ரோவில் 8 இந்தியர்கள் மற்றும் ஏழு துருக்கியர்கள் பயணம் செய்துள்ளனர்.
Kerch Strait Ships Accident
கருங்கடலில் பயணம் செய்த இரண்டு கப்பல்கள் விபத்திற்கு உள்ளாகியது. விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இந்தியர்களும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்.
பினால் குமார் பரத்பாய் தண்டல், விக்ரம் சிங், சரவணன் நாகராஜன், விஷால் டோட், ராஜா தெப்நாராயணன் பனிக்ராஹி, கரன்குமார் உள்ளிட்ட மாலுமிகள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
சித்தார்த் மெஹர், நீரஜ் சிங், செபஸ்டியன் ப்ரிட்டோ ப்ரீஜ்லின் சஹாயராஜ், ருஷிகேஷ் ராஜூ சாக்பல், அக்ஷ்ய பாபன் ஜாதவ், ஆனந்த சேகர் அவினேஷ் ஆகியோர்களை காணவில்லை. ஹரிஷ் ஜோகி, சச்சின் சிங், அஷீஷ் நாயர், கமலேஷ்பாய் கோபால்பாய் தண்டல் ஆகியோரை ரஷ்ய கடற்படை வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.
காப்பாற்ற வீரர்களுக்கு கெர்ச் நகரில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் நலமுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தொலைந்து போனவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : நியூசிலாந்திற்கு கப்பலில் பயணம் செய்த தமிழர்களின் நிலை என்னானது ?