உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி ரஷ்யாவில் சூடு பிடிக்க, உலகெங்கிலும் இருக்கும் முக்கிய பிரமுகர்களின் பட்டியலை வெளியிட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியிருக்கின்றது பனாமா பேப்பர் விவகாரம்.
பெர்சிலோனாவினை சேர்ந்த லியோனெல் மெஸ்ஸி அர்ஜெண்டினாவின் கால்பந்தாட்ட குழுவிற்கு தலைமை ஏற்று உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் பங்கேற்பதற்காக ரஷ்யா வந்துள்ளார். சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் அமைப்பு இரண்டு வருடங்களாக பனாமா நாட்டில், கணக்கில் காட்டப்படாத சொத்துகளை வைத்துள்ள முக்கியப் பிரமுகர்கள் பற்றிய விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியா சார்பில் 25 ஊடகவியலாளர்களுடன் இவ்விசாரணையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஈடுபட்டிருந்தது. இன்று காலையில் இருந்து ஒவ்வொரு முக்கியப் பிரமுகர்களின் பெயர்களையும் நிறுவனங்களையும் வெளியிட்டு வருகின்றது அந்தந்த நாடுகளைச் சேர்ந்த ஊடகவியல் துறை. பனாமா பேப்பர்களில் ஐஸ்வர்யா மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.
தற்போது இப்பட்டியலில் புதிதாக இணைந்திருக்கின்றார் லியோனெல் மெஸ்ஸி. ஏற்கனவே உருகுவே மற்றும் பெலிஜ் நாடுகளில் இருக்கும் தொழில் நிறுவனங்களில் அதிக அளவு முதலீடு செய்திருப்பது தொடர்பாக இவர் பெயரிலும், இவருடைய தந்தை ஜார்ஜ் ஹொரைசியோ மெஸ்ஸி பெயரிலும், ஸ்பெயினில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மெகா ஸ்டார் எண்டெர்பிரைசஸ் என்ற பனாமாவை சேர்ந்த நிறுவனத்தில் சட்டத்திற்கு புறம்பாக முதலீடு செய்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இப்பட்டியலில் இருக்கும் மேலும் சில முக்கிய பிரமுகர்களின் பெயர்கள்