ராஜபக்சே பதவியைத் தொடர்ந்தால் சரிசெய்யப்பட இயலாத விளைவுகளை சந்திக்க நேரிடும் – இலங்கை நீதிமன்றம்

ராஜபக்சே மற்றும் இதர அமைச்சர்கள் தங்களின் பணியைத் தொடர இடைக்காலத் தடை விதித்து உத்தரவு

Mahinda Rajapaksa, ராஜபக்சே, மைத்ரிபாலா சிறிசேனா
Mahinda Rajapaksa

Mahinda Rajapaksa : ரணில் விக்ரமசிங்கேவின் ஆட்சி கலைக்கப்பட்டு புதிய பிரதமராக, இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

சபாநாயகர் கரு ஜெயசூர்யா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். தொடர் அமளிக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி வாக்களித்தன. ரணில் தரப்பு பெரும்பான்மை பெற்றதாக கரு ஜெயசூர்யா அறிவித்தார். ஆனாலும் ரணிலை பிரதமராக அறிவிக்க இயலாது என்று சிறிசேனா அறிவித்தார்.

மகிந்த ராஜபக்சே (Mahinda Rajapaksa) பிரதமராக பணியாற்றத் தடை

ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா, தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிசேனாவின் இந்த அறிக்கையை எதிர்த்து இலங்கையின் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை 03/12/2018 அன்று நடைபெற்றது.

அதில் ராஜபக்சே மற்றும் அவருடன் பதவியேற்ற அமைச்சர்களும் தங்களின் துறையில் பணியாற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 12 மற்றும் 13 தேதிகளில் நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது.  ராஜபக்சே மற்றும் அவரின் அமைச்சர்கள் தங்களின் பணியை தொடர்ந்தால் சரி செய்ய இயலாத சேதங்கள் ஏற்படும் என்றும் கூறியிருக்கிறார்கள் நீதிபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : நம்பிக்கை வாக்கெடுப்பில் படுதோல்வி அடைந்த ராஜபக்சே

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mahinda rajapaksa cant act as a pm says sri lanka court

Next Story
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் HW புஷ் அரிய புகைப்படங்கள் தொகுப்புGeorge HW Bush rare photos
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express