Man dies from hantavirus in China: How this virus spreads
Hanta Virus in China: கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்க, சீனாவில் ஹண்டா எனும் ஒருவகை வைரஸ் பாதிப்பின் காரணமாக ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
Advertisment
சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகளாவிய பலி எண்ணிக்கை 16 ஆயிரத்திற்கும் மேல் சென்றுள்ளது. உலகெங்கிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதற்கும் ரயில் சேவை வருகிற 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பற்றிய அச்சமே மக்கள் மத்தியில் இன்னும் குறையாத நிலையில், சீனாவில் மற்றொரு புதிய வைரஸ் பரவத்தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை, சீனாவின் ஷாண்டாங் மாகாணத்திற்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தவர் ஹாண்டா வைரஸ் தாக்கி மரணம் என்று வெளியிட்ட செய்திதான் தற்போது ஹண்டா வைரஸ் பற்றி அனைவரும் பேசக் காரணமாக அமைந்துள்ளது.
கொரோனா வைரஸைப் போல் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு எளிதில் பரவாமல், கொறித்துத்திண்ணும் (ரோடண்ட்) எலி வகை பிராணிகளிடம் இருந்து பரவுவது. அதாவது எலியின் சிறுநீரையோ அல்லது கழிவையோ தொட நேர்ந்தால், அதிலிருந்து மனிதனுக்கு பரவும்.
ஹன்டா வைரஸ் தொற்று காரணமாக, சுவாசம் தொடர்பான பிரச்னைகள் (HPS), ரத்தக்கசிவுடன் காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு (5FRS), போன்றவை வரும். ஆனால், இந்த நோய்த் தொற்று காற்று மூலம் பரவாது. கொறித்துண்ணிகளின் சிறுநீர், எச்சில், மலம் போன்றவற்றைத் தொடுவதன் மூலம் மட்டுமே மனிதர்களுக்குப் பரவும். மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது.
ஹண்டா வைரஸ் அறிகுறிகள்
சோர்வு, காய்ச்சல் மற்றும் தசை வலிகள், தலைவலி, தலைச்சுற்றல், சளி மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் ஆகியவை எச்.பி.எஸ் ஆரம்ப அறிகுறிகளில் அடங்கும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது இருமல் மற்றும் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும் மற்றும் இறப்பு விகிதம் 38 சதவிகிதம் என்று சி.டி.சி தெரிவித்துள்ளது.
எச்.எஃப்.ஆர்.எஸ்ஸின் ஆரம்ப அறிகுறிகளும் அப்படியே இருக்கும்போது, இது குறைந்த இரத்த அழுத்தம், கடுமையான அதிர்ச்சி, வாஸ்குலர் கசிவு மற்றும் கடுமையான சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்.
அதேபோன்று, தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருவது போல, இந்த ஹாண்டா வைரஸ் புதிய வைரஸ் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”