Mexico president wants team led by Modi to stop war, North Korea corona status today world news: இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
கோத்தபய ராஜபக்சேவுக்கு தாய்லாந்து தற்காலிக புகலிடம்
கோத்தபய ராஜபக்சே தற்காலிகமாக தாய்லாந்து நாட்டில் தங்குவதற்கு தாய்லாந்து அரசு இணங்கியுள்ளது. அதேநேரம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இலங்கை அதிபர் அவருக்கு நிரந்தர புகலிடம் அளிக்கும் மூன்றாவது தேசத்தைத் தேடுவார் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்தார்.
அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் ஜூலை மாதம் இலங்கையை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் இருக்கும் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூர் விசா வியாழக்கிழமை காலாவதியானதால் தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: ரவூப் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்கும் முன்மொழிவு; இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை
ஜூலை 13 அன்று மாலத்தீவுக்குப் பறந்த பிறகு, கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றார், அங்கு ஒரு நாள் கழித்து நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து பல மாத எதிர்ப்புகளுக்குப் பிறகு ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
வடகொரிய அதிபர் உடல்நலம்
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் வியாழக்கிழமை கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டின் வெற்றியை அறிவித்தார், அதேநேரம் அதிபரின் சகோதரி அதிபர் காய்ச்சலால் அவதிப்பட்டதை வெளிப்படுத்தினார் மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக "கொடிய பதிலடி" என்று சபதம் செய்தார், கொரோனா பரவலுக்கு தென்கொரியா தான் காரணம் என வடகொரியா குற்றம் சாட்டுகிறது.
மே மாதத்தில் விதிக்கப்பட்ட அதிகபட்ச தொற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைகளை நீக்குமாறு அதிபர் கிம் உத்தரவிட்டார், மேலும் வட கொரியா "தொற்றுநோய்க்கு எதிரான தடையை பராமரிக்க வேண்டும் மற்றும் உலகளாவிய சுகாதார நெருக்கடி முடியும் வரை தொற்றுநோய்க்கு எதிரான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்" என்று அரசு செய்தி நிறுவனமான KCNA மூலம் ஒரு அறிக்கை கூறுகிறது.
எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதை வட கொரியா ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை. அதற்கு பதிலாக தினசரி காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையைப் பதிவுசெய்தது, இது மொத்தம் 4.77 மில்லியன், ஆனால் ஜூலை 29 முதல் இதுபோன்ற புதிய பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
போர்களை தடுக்க மோடி தலைமையில் குழு – மெக்சிகோ அதிபர்
நாடுகளுக்கு இடையே எழும் அதிகார போட்டி காரணமாக தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இது குறித்து மெக்சிகோ நாட்டு அதிபர் லோபஸ் ஒபரடோர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், ஐநா மூலம் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிப்பதையும் மெக்சிகோ அதிபர் சுட்டிகாட்டியுள்ளார்.
எனவே, உலகில் போர்கள் ஏற்படுவதை தடுக்க, இந்திய பிரதமர் மோடி, போப் பிரான்சிஸ், ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் ஆகிய மூன்று பேர் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஐ.நா.,விடம் தாம் பரிந்துரைக்க போவதாகவும், பிரதமர் மோடி உட்பட மூவரின் தலையீட்டை சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் ஏற்க வேண்டும் என்றும் மெக்சிகோ அதிபர் லோபஸ் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.