Miss England 2019 Bhasha Mukherjee is reporting for hospital duty : இந்திய வம்சாவளியான பாஸா முகர்ஜி இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து மருத்துவ பட்டப்படிப்பு முடித்தவர். கடந்த ஆண்டு மருத்துவ பிரிவில் பட்டம் பெற்ற அவர், ஆக்ஸிடெண்டலாக மிஸ் இங்கிலாந்து 2019 போட்டியில் பங்கேற்றார். அதில் அவர் பட்டமும் பெற்றார்.
Advertisment
மனிதாபிமான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவர் சில மாதங்களாக இந்தியாவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கொரோனா குறித்தும், அதனால் ஏற்பட்டிருக்கும் இழப்புகள் குறித்தும் அறிந்து கொண்ட அவர் ஏப்ரல் 1ம் தேதி இங்கிலாந்திற்கு திரும்பிச் சென்றார்.
சுவாசக்கோளாறு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ரெஸ்பிரேட்டரி ஸ்பெஷலிஸ்ட்டான அவர், 14 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு தன்னுடைய மருத்துவப் பணிகளை துவங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.
தன்னுடைய நண்பர்கள் இந்த இக்கட்டான சூழலில் மருத்துவத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தானும் தன்னுடைய துறைசார் பணியை மேற்கொள்ள உள்ளார். மீண்டும் மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”