Miss Hawaii 2015 Jeanné Kapela tested Covid-19 positive
Miss Hawaii 2015 Jeanné Kapela tested Covid-19 positive : 2015ம் ஆண்டு ஹவாய் தீவின் அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஜென்னி கபெலா. சமீபத்தில் நியூயார்க் சென்ற அவர் நியூயார்க் ஜெட்ஸ் டான்ஸ் டீமில் இணைய “ஆடிசன்” சென்று வந்துள்ளார். அவர் நியூயார்க் சென்று திரும்பிய பிறகு கொரோனாவுக்கு ஆளானது தெரிய வந்துள்ளது.
25 வயது ஆகும் ஜென்னீ “நியூயார்க்கில் இருந்து ஹவாய் திரும்புவதற்கு முன்பே, கோவிட் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நாடு முழுவதும் இந்த நோயை கண்டறிவதற்கான கருவிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை நாம் தொடர்ந்து அனுபவித்தும் வருகின்றோம்” என்று கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
Miss Hawaii 2015 Jeanné Kapela tested Covid-19 positive
நியூயார்க்கில் இருந்து ஹவாய் திரும்பிய போது யாரோடெல்லாம் தொடர்பில் இருந்தாரோ அவர்கள் அனைவரையும் சோதனை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார் ஜென்னீ. ஆனால் அவர்கள் யாருக்கும் தொற்று இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோய்க்கு எதிராக அனைவரும் இணைந்து போராட வேண்டிய நேரம் இது. யாருக்கெல்லாம் தேவையோ, அவர்களுக்கு எல்லாம் உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைக்க வேண்டும். நாம் அனைவரும் நம்முடைய மருத்துவ தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அனைவருக்கும் சோதனை செய்து கொள்ள வசதிகளும், சோதனைகள் செய்தால் உடனடியாக சோதனை முடிவுகள் கிடைக்கவும், இலவச மருத்துவ சேவை கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”