Advertisment

New Year 2020: புத்தாண்டு பிறக்கும் முதல் நாடு தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy New Year 2020 Wishes: first country celebrating new year is kiribati, last country New Year 2020 is Baker Island- புத்தாண்டு 2020 முதல் நாடு கிரிபாட்டி

Happy New Year 2020 Wishes: first country celebrating new year is kiribati, last country New Year 2020 is Baker Island- புத்தாண்டு 2020 முதல் நாடு கிரிபாட்டி

Happy New Year 2020: பூமிப் பந்தில் ஒரு நாட்டில் பகல் இருக்கும் வேளையில், இன்னொரு நாட்டில் இரவு இருப்பது இயற்கை. இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. ஆனால் பசிபிக் நாடுகள் சிலவற்றில் இந்திய நேரப்படி இன்று (டிசம்பர் 31) பிற்பகலே புத்தாண்டு பிறக்கிறது. அந்த வகையில் உலகில் முதன்முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடு எது? கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது? என்கிற விவரங்களை இங்கு காணலாம்.

Advertisment

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகளில் முதன் முதலாக புத்தாண்டு பிறக்கிறது. அதாவது, அந்த நாடுகளில் அந்த நேரத்தில் 2020 ஜனவரி 1 அதிகாலை 12 மணி ஆகிவிடுகிறது.

இந்த நாடுகளைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் புத்தாண்டு பிறக்கும் நேரம் வருமாறு:

3:45 pm: சாதாம் தீவுகள்

4:30 pm: நியூசிலாந்து

5:30 pm: ரஷ்யாவின் ஒரு பகுதி

6:30 pm: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, கான்பெரா, ஹோனியாரா

7 pm: அடிலைய்டு, புரோக்கன் ஹில், செடுனா

7:30 pm: பிரிஸ்பேன், போர்ட் மோர்ஸ்பை, ஹகத்னா

8 pm: டார்வின், அலைஸ் ஸ்பிரிங்ஸ், டெனண்ட் கிரீக்

8:30 pm: ஜப்பான், தென் கொரியாவின் டோக்யோ, சியோல், பியாங்யாங்க், டிலி, நெருல்மட்

9:30 pm: சீனா, பிலிப்பைன்ஸ்

10:30 pm: இந்தோனேசியா, தாய்லாந்து

11 pm: மியான்மர்

11:30 pm: வங்கதேசம்

11:45 pm: நேபாளத்தின் காட்மண்ட், பொக்காரா, பிரட் நகர், டாரன்

12:00 am: இந்தியா, இலங்கை

12:30 am: பாகிஸ்தான்

1 am: ஆப்கானிஸ்தான்.

தொடர்ந்து அஸெர்பைஜன், ஈரான், மாஸ்கோ, கிரீஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள்.

5:30 am: இங்கிலாந்து

தொடர்ந்து பிரேசில், நியூஃபவுன்லேண்ட்

இந்திய நேரப்படி ஜனவரி 1, 9:30 am to 1:30 pm: கனடா, அமெரிக்கா

தொடர்ந்து, மார்கொயஸாஸ், அமெரிக்கன் சமோவா

ஜனவரி 1, 5:50 pm: பேக்கர் தீவு. இதுவே புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடு.

ஆக, இந்திய நேரப்படி இன்று பிற்பகலே உலகில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகிறது. கொண்டாடுங்கள் மக்களே!

Chennai New Year Eve Live : உச்சக்கட்ட நியூ இயர் மூடில் இசிஆர் – பார்ட்டி ரன்வே ரெடி

 

Happy New Year
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment