இந்த கொரோனா காலங்களில் அதிகம் தேடப்படும் நபராக இருக்கிறார் வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன். அவர் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருப்பதால் பலரும் அவருக்கு என்ன ஆனது என்று சிந்திக்க துவங்கியுள்ளனர். சிலர் அவர் இறந்துவிட்டதாகவும், அவருக்கு இருதய கோளாறு இருப்பதாகவும், சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை நடந்ததாகவும் பல்வேறு வதந்திகளை கூறி வருகின்றனர். ஆனால் அவருடைய தற்போதைய உண்மையான நிலை யாருக்குமே தெரியவில்லை.
இந்நிலையில் தென்கொரிய நாடு, வட கொரிய அதிபர் மிகவும் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்று கூறியது. ஆனால் சமீபத்தில் வெளியான தகவல் மேலும் பதட்டமடைய வைக்கிறது. வடகொரியாவில் இருந்து வெளியேறி, தென்கொரியாவில் வசித்து வரும் வடகொரிய முன்னாள் தூதரக அதிகாரி “கிம் ஜாங் உன், உயிருடன் தான் இருக்கிறார். ஆனால் அவரால் எழுந்து நடமாட முடியாத நிலையில் தான் இருக்கிறார். எழுந்து அமரவோ, நடக்கவோ இயலாது” என்றும் அதிர்ச்சியான தகவலை அவர் கூறியுள்ளார்.
வடகொரியாவின் தந்தை என்று அழைக்கப்படும் கிம் ஜாங் உன் தன்னுடைய பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக, ஏப்ரல் 15ம் தேதி கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அவர் பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படவில்லை. அன்றைய தினத்தில் இருந்து தான் இது போன்ற சர்ச்சைகள் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“