184 நாடுகளையும் நரகத்திற்கு அனுப்ப வழி செய்த சீனா – அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் !

கொரோனாவால் ஏற்பட்ட இழப்பிற்காக ஜெர்மனி சீனாவிடம் 140 பில்லியன் அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாக கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

By: April 30, 2020, 12:11:06 PM

Failure to tame coronavirus at origin led to 184 countries ‘going through hell’ : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.184 நாடுகளில் மையம் கொண்டிருக்கும் இந்நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. கொரோனா நோயின் தீவிரம் குறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் தினமும் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம்.

செவ்வாய் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரெம்ப்,  ”சீனா, கொரோனா நோயை கட்டுப்படுத்த தவறிவிட்டது. அதனால் தான் இப்போது 184 நாடுகள் நரக வேதனையை அடைந்துள்ளன” என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க : கொரோனா இயற்கையானதல்ல – நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர் கூறியது உண்மையா?

அமெரிக்காவில் இந்த நோய் பரவ துவங்கிய காலம் முதலே சீனாவை பகிரங்கமாக அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகிறது. இந்நோய் வுஹானில் இருக்கும் ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கொரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கும் உயிர் மற்றும் பொருளாதார இழப்பினை சரி செய்ய மாபெரும் தொகையை நஷ்ட ஈடாக பெற அமெரிக்கா எண்ணியுள்ளது.

ஏற்கனவே ஜெர்மனி சீனாவிடம் 140 பில்லியன் அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாக கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. சரியான நேரத்தில் சீனா சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தி இருந்தால் இப்படியான சேதங்களை உலகம் தவிர்த்திருக்கும் என்று அமெரிக்கா,இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க : லாக்டவுனில் எங்கே இருக்கிறார் டிடிவி? வைரலாகும் முறுக்கு ”மீசை தினகரன்” புகைப்படங்கள்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Failure to tame coronavirus at origin led to 184 countries going through hell donald trump

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X