கிம் உயிரோடு தான் இருக்கிறார்! ஆனால்? – முன்னாள் தூதரக அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

வடகொரியாவின் தந்தை என்று அழைக்கப்படும் கிம் ஜாங் உன் தன்னுடைய பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக, ஏப்ரல் 15ம் தேதி  கொண்டாடுவது வழக்கம்

By: April 30, 2020, 1:04:52 PM

இந்த கொரோனா காலங்களில் அதிகம் தேடப்படும் நபராக இருக்கிறார் வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன். அவர் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருப்பதால் பலரும் அவருக்கு என்ன ஆனது என்று சிந்திக்க துவங்கியுள்ளனர். சிலர் அவர் இறந்துவிட்டதாகவும், அவருக்கு இருதய கோளாறு இருப்பதாகவும், சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை நடந்ததாகவும் பல்வேறு வதந்திகளை கூறி வருகின்றனர். ஆனால் அவருடைய தற்போதைய உண்மையான நிலை யாருக்குமே தெரியவில்லை.

மேலும் படிக்க : 184 நாடுகளையும் நரகத்திற்கு அனுப்ப வழி செய்த சீனா – அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் !

இந்நிலையில் தென்கொரிய நாடு, வட கொரிய அதிபர் மிகவும் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்று கூறியது. ஆனால் சமீபத்தில் வெளியான தகவல் மேலும் பதட்டமடைய வைக்கிறது. வடகொரியாவில் இருந்து வெளியேறி, தென்கொரியாவில் வசித்து வரும் வடகொரிய முன்னாள் தூதரக அதிகாரி “கிம் ஜாங் உன், உயிருடன் தான் இருக்கிறார். ஆனால் அவரால் எழுந்து நடமாட முடியாத நிலையில் தான் இருக்கிறார். எழுந்து அமரவோ, நடக்கவோ இயலாது” என்றும் அதிர்ச்சியான தகவலை அவர் கூறியுள்ளார்.

வடகொரியாவின் தந்தை என்று அழைக்கப்படும் கிம் ஜாங் உன் தன்னுடைய பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக, ஏப்ரல் 15ம் தேதி  கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அவர் பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படவில்லை. அன்றைய தினத்தில் இருந்து தான் இது போன்ற சர்ச்சைகள் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:North koreas president kim jong un alive but cannot walk by himself says former ambassador

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X