குதிரை சவாரி செய்யும் எலிசபெத் மகாராணி ; எத்தனை நாள் தான் தனிமைப்படுத்திக் கொள்வது?

இங்கிலாந்தின் சாலைகள் வெறுமையாகிவிடவில்லை. மாறாக அன்பினால் நிரப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.

Queen Elizabeth II was seen in public on Sunday for the first time since the UK's lockdown announced
Queen Elizabeth II was seen in public on Sunday for the first time since the UK's lockdown announced

Queen Elizabeth II was seen in public on Sunday for the first time since the UK’s lockdown announced : கொரோனா வைரஸ் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தை அனைவரும் இறுதியாக பொதுவெளியில் பார்த்தனர். அதன் பின்பு நேற்று அவர் 14 வயதான குதிரை ஒன்றில் பயணம் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க : மகளின் படிப்பிற்காக சேர்த்த பணத்தில் கொரோனா நிதி; மோடி பாராட்டிய மதுரை மோகன்

14 வயதாகும் இந்த குதிரையின் பெயர் பால்மோரல். கடந்த வார இறுதியை செலவழிக்கும் விதமாக குதிரை சவாரி நடத்தினார் ராணி. குதிரை ஓட்டுவது ராணிக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். எப்போதும் விண்ட்ஸோர் க்ரௌண்டில் இவர் குதிரை சவாரி மேற்கொள்வது வழக்கம்.

கொரோனா ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பு அவர் தன்னுடைய பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து தங்களின் பெக்‌ஷெயர் வீட்டிற்கு கணவரோடு சென்று தனிமைப்படுத்திக் கொண்டார். அவர் அதன் பிறகு இரண்டு முறை நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்தியுள்ளார்.

மேலும் படிக்க : கோவையில் திருடு போன பைக்: பார்சலில் வந்த ஆச்சர்யம்!

கொரோனாவுக்கு எதிரான போரில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்று கூறினார். மேலும் நாட்டு மக்களை வீட்டில் இருக்கும் படி அவர் அறிவுரை கூறினார். மேலும் நாட்டில் நடக்கும் செயல்பாடுகள் குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசினார்.

பின்னர், இரண்டாம் உலகப் போரின் போது, நாஜி ஜெர்மனியை இங்கிலாந்து வீழ்த்தியது. விக்டரி ஆஃப் ஈரோப் என்று கூறப்படும் அந்த நிகழ்வின் 75வது நினைவு தினத்தை ஒட்டி நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்போது அவர், இந்த பெருந்தொற்று காரணமாக இங்கிலாந்தின் சாலைகள் வெறுமையாகிவிடவில்லை. மாறாக அன்பினால் நிரப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Queen elizabeth ii was seen in public on sunday for the first time since the uks lockdown announced

Next Story
WHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com