Russia detains ISIS militant plotting suicide attack against Indian elite: Report: இந்தியாவின் முக்கிய தலைவருக்கு எதிராக தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த மத்திய ஆசிய நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) தற்கொலைப்படை பயங்கரவாதியை கைது செய்துள்ளதாக ரஷ்யாவின் உயர்மட்ட உளவு நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்ததாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் (FSB) கூற்றுப்படி, 2022 ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் துருக்கியில் இருந்த வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாமிய அரசின் தலைவர்களில் ஒருவரால் தற்கொலைப்படை தாக்குதலை நிகழ்த்த நியமிக்கப்பட்டார் என்று அரசுக்கு சொந்தமான TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: ரஷ்ய அதிபர் புதினின் மூளையாக செயல்படுவரின் மகள் கார் குண்டுவெடிப்பில் பலி… உலகச் செய்திகள்
"ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் ரஷ்யாவில் சட்டவிரோதமான (ரஷ்ய கூட்டமைப்பால்) இஸ்லாமிய அரசு சர்வதேச போராளி அமைப்பின் உறுப்பினரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளது. ”கைது செய்யப்பட்டவர் மத்திய ஆசிய நாட்டைச் சேர்ந்தவர், அவர் இந்தியாவின் ஆளும் கட்சியின் உறுப்பினருக்கு எதிராக தன்னைத்தானே வெடிக்கச் செய்து தற்கொலைப்படை தீவிரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டார், ”என்று FSB தெரிவித்துள்ளது.
தீவிரவாதிக்கு "சித்தாந்த போதனை டெலிகிராம் மெசஞ்சர் கணக்குகள் வழியாகவும், இஸ்தான்புல்லில் ஐ.எஸ் பிரதிநிதியுடன் காணொலி வாயிலான தனிப்பட்ட சந்திப்புகளின் மூலமும் நடத்தப்பட்டது" என்று மக்கள் தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட தீவிரவாதி, ஐ.எஸ் தலைமைக்கு விசுவாசமாக இருப்பதாக சத்தியம் செய்ததாக FSB குறிப்பிட்டது, அதன் பிறகு அவர் ரஷ்யாவுக்குச் செல்லவும், தேவையான ஆவணங்களைத் தயாரித்து இந்த பயங்கரவாதச் செயலைச் செய்ய இந்தியாவுக்கு விமானத்தில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டதாக அறிக்கை கூறியது.
ஈராக் மற்றும் சிரியாவில் தொடர்ச்சியான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் மற்றும் கொலைகளுக்கு பொறுப்பான பயங்கரமான பயங்கரவாத குழு ISIS மற்றும் அதன் அனைத்து துணை அமைப்புகளும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil