Russia grants temporary approval for Avifavir to treat covid19
Russia grants temporary approval for Avifavir to treat covid19 : உலகம் முழுவதும் கொரோனாவைரஸ் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸால் உயிரிழந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் இந்நோயால் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். கிட்டத்தட்ட 5,000 நபர்கள் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவில் கொரானா வைரஸை எதிர்த்துப் போராடும் மாத்திரைகளை கண்டறிந்துள்ளதாக நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு துறை அறிவித்துள்ளது.
ரஷ்ய முதலீட்டு நிறுவனமான ஆர்.டி.ஐ.எஃப். உதவியுடன் என்ற கெம்ரார் நிறுவனம் இந்த மருந்தினை கண்டறிந்துள்ளது. வருகின்ற 11ம் தேதி முதல் நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் மூலமாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியும். ஃபேவிபிரவிர் என்று 1990ஆம் ஆண்டு ஜப்பான் நிறுவனம் கண்டுபிடித்த மருந்தில் சில மாற்றங்களை உருவாக்கி அவிஃபேவிர் என்ற இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸிற்கு எதிராக மாத்திரைகள் மற்றும் தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமான ஆராய்ச்சியை நடத்தி வருகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“