சிங்கப்பூர் விமானத்தில் தமிழில் அறிவிப்புகள்! தாய்மொழிக்கு பெருமை சேர்த்த விமானி!

இந்த பதிவினை முகநூலில் பார்த்த ஏராளமான தமிழர்கள் சரவணன் அய்யாவுவை மனமார வாழ்த்தி வருகின்றனர்.

Singapore Scoot airline Tamil announcement Viral trending video, Pilot Saravanan Ayyavu
Pilot Saravanan Ayyavu

Singapore Scoot airline Tamil announcement Viral trending video : சிங்கப்பூர் விமான நிறுவனமான ஸ்கூட்டில் பணிபுரிந்து வருகிறார் விமானி சரவணன் அய்யாவு. தமிழரான இவருக்கு வெகுநாட்களாக தமிழில் பயணிகளுக்கு அறிவிப்புகளை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சமீபத்தில் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற வந்த விமானத்தில் தமிழில் பயணிகளுக்கு அறிவிப்புகளை வழங்கினார்.

இந்த அறிவிப்பில், சென்னை மற்றும் சிங்கப்பூரின் வானிலை எவ்வாறு உள்ளது? எவ்வளவு அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கின்றோம்? எப்போது தரையிறங்குவோம்? நேரம் குறித்த தகவல்களை பதிவு செய்தார். மேலும் இதனை வீடியோவாக எடுத்து தன்னுடைய முகநூல் பக்கத்திலும் பதிவேற்றினார். இதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Singapore Scoot airline Tamil announcement Viral trending video

இது குறித்து ஸ்கூட் விமான நிறுவனத்திடம் கேட்ட போது, சரவணன் அய்யாவு சிறந்த தமிழ் படைப்பாளியாக இருக்கின்றார். அந்த காரணத்தால் அவருடைய கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்று கூறியுள்ளார். இந்த பதிவினை முகநூலில் பார்த்த ஏராளமான தமிழர்கள் சரவணன் அய்யாவுவை மனமார வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் படிக்க :வீடியோ : அவ்வளவு பயமிருந்தா எதுக்கு சார் திருட போறீங்க? ஏ.டி.எம்-மில் இருந்து தலைதெறிக்க ஓடிய திருடன்

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Singapore scoot airline tamil announcement viral trending video pilot saravanan ayyavu

Next Story
பழிவாங்கும் நடவடிக்கை : மரண தண்டனை குறித்து முஷாரப் கருத்து
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express