watch viral trending video of hilarious robbery fail : சீனாவில் ஒருவர் ஏ.டி.எம் ஒன்றில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால் அவருக்கு பின்னால் இருந்த கதவை எப்படி திறக்க வேண்டும் என்று தெரியாமல் போனதால் ஏ.டி.எம்.மில் பணம் கொள்ளையடிப்பதற்கு பதிலாக எப்படி தப்பித்து செல்லலாம் என்பதில் தான் அதிகம் கவனம் செலுத்தினார்.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
சாங்காய்ஸ்ட் என்ற பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில், ஏ.டி.எம். ஒன்றில் திருட வந்துள்ளார் ஒருவர். அவர் ஏ.டி.எம் கதவுகளை திறந்துவிட்டு உள்ளே செல்லவும், அந்த கதவு தானாக மூடிக்கொண்டது. அவர் உள்ளே சென்ற பின்பு கதவுகளை மீண்டும் திறக்க இயலவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அந்த நபர் அந்த கதவையும், ஏ.டி.எம். மெஷினையும் மாற்றி மாற்றி கீழே இருந்த பொருளை கொண்டு இடிக்க துவங்கினார். ஆனால் அவர் என்ன செய்தும் அந்த கதவுகள் திறந்து கொள்ளவில்லை.
இதனால் பயந்து போனார் அந்த நபர். சிறிது நேரம் கழித்து கதவு ஆட்டோமேட்டிக்காக திறந்தது. அவர் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியேறினார். ஆனாலும் அவரை காவல்துறையினர் கைது செய்தது. இது போன்ற சர்ச்சையான விவகாரங்களில் மாற்றிக் கொள்வது இந்த திருடருக்கு ஒன்றும் புதிதில்லை என்கிறது ஷாங்காய் காவல்துறை.