பாதுகாப்பு ஆடைகள் இல்லை… குப்பை பைகளை பயன்படுத்தும் ஸ்பெயின் டாக்டர்கள்

பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே பயன்படுத்திய பாதுகாப்பு ஆடைகளை அவர்கள் மீண்டும் பயன்படுத்தும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

Spain health care workers use trash bags for protective personal gear
Spain health care workers use trash bags for protective personal gear

Spain health care workers use trash bags for protective personal gear : உலகின் தலை சிறந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என்று கூறும் நாடுகளின் மருத்துவ வசதியை கேலிக்கு உள்ளாக்கியுள்ளது கொரோனா. போதுமான வெண்டிலேட்டர்கள் இல்லை. பாதுகாப்பு ஆடைகள் இல்லை. மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஆனாலும் கொரோனாவுடன் தொடர்ந்து போராடி வருகிறார்கள் மருத்துவர்கள்.

மேலும் படிக்க : ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் என்னை போருக்கு அனுப்பாதீர்கள் – பிரதமருக்கு மருத்துவர் வேண்டுகோள்!

மருத்துவர்கள், மருத்துவ துறை சார்ந்தவர்கள் தங்களுக்கான போதிய பாதுகாப்பு வசதிகளை பெற்றிருந்தாலும் கூட, நோய் தொற்றுக்கு எளிதில் ஆளாகிவிடக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஸ்பெயின் நாட்டில் போதுமான பாதுகாப்பு ஆடைகள், என்95 மாஸ்க்குகள் இல்லாமல் மருத்துவ பணியாளர்கள் திண்டாடி வருகிறார்கள். FFP2 மற்றும் FFP3 முக கவசங்களை உபயோகிக்க பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மருத்துவமனைகளில் அது போன்ற மாஸ்க்குகள் முற்றிலுமாக தீர்ந்துவிட்ட நிலையில், சாதாரண அறுவை சிகிச்சை மாஸ்க்குகளை ஒன்றன் மீது ஒன்று என இரண்டை ஒரே நேரத்தில் பயன்படுத்துகின்றனர் மருத்துவ பணியாளர்கள். ஒரு வேளை அடுத்த நாளைக்கு தேவையான மாஸ்க்குகள் இல்லையென்றால் ஏற்கனவே பயன்படுத்தியதை பத்திரப்படுத்திக் கொள்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இதை விட மோசமாக, தங்களுக்கு தேவையான பாதுகாப்பு கவச ஆடைகளை குப்பை சேகரிக்கும் பைகளை பயன்படுத்தி உபயோகிக்கிறார்கள். பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே பயன்படுத்திய பாதுகாப்பு ஆடைகளை அவர்கள் மீண்டும் பயன்படுத்தும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. நம்மை காக்கும் மருத்துவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை நினைத்தால் ஏனோ மனம் மேலும் கவலை அடைகிறது என்று கூறியுள்ளனர்.

மேலும் படிக்க : ஆசையோடு கட்டிக் கொள்ள ஓடி வந்த குழந்தை… தடுத்து நிறுத்தி கண்ணீர் விடும் டாக்டர் அப்பா!

ஸ்பெயின் நாட்டில் இதுவரை 12 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு இந்நோயின் அறிகுறிகள் அதிகரித்து உள்ளது.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Spain health care workers use trash bags for protective personal gear

Next Story
ஆசையோடு கட்டிக் கொள்ள ஓடி வந்த குழந்தை… தடுத்து நிறுத்தி கண்ணீர் விடும் டாக்டர் அப்பா!coronavirus outbreak saudi doctor stops his son from hugging him
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com