Reuters
Sri Lanka asks China to defer military ship visit after India protests: அண்டை நாடான இந்தியாவின் இராஜதந்திர அழுத்தத்திற்கு அடிபணிந்து, இந்த வாரத்தில் இலங்கைக்கு திட்டமிடப்பட்டிருந்த சீனக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் கேட்டுக் கொண்டதாக இலங்கை கூறியுள்ளது.
யுவான் வாங் 5 என்ற அந்த சீன கப்பல் வியாழன் அன்று இலங்கையின் தெற்கில் சீனாவால் கட்டப்பட்டு குத்தகைக்கு விடப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை நிரப்புவதற்காக ஐந்து நாட்களுக்கு வரவிருந்தது. இது தற்போது கிழக்கு இந்தியப் பெருங்கடலில் பயணித்து வருவதாக ரெஃபினிடிவ் எய்கான் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: பெட்ரோல், டீசல் விலை உயர்வு; வங்க தேசத்தில் வெடித்தது மக்கள் போராட்டம்
வெளிநாட்டு பாதுகாப்பு ஆய்வாளர்கள் யுவான் வாங் 5 ஐ சீனாவின் சமீபத்திய தலைமுறை விண்வெளி கண்காணிப்பு கப்பல்களில் ஒன்றாக விவரிக்கின்றனர், இந்த கப்பல் செயற்கைக்கோள், ராக்கெட் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதல்களை கண்காணிக்க பயன்படுகிறது.
யுவான் வாங் கப்பல்கள் மக்கள் விடுதலை இராணுவத்தின் வியூக ஆதரவுப் படையால் இயக்கப்படுவதாக அமெரிக்காவின் பென்டகன் கூறுகிறது.
இந்தியாவின் கொல்லைப்புறத்தில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவ தளமாக தனது பெரிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த போட்டியாளரான சீனா பயன்படுத்தும் என்று இந்தியா அஞ்சுகிறது. $1.5 பில்லியன் மதிப்புள்ள துறைமுகம் ஆசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் முக்கிய கப்பல் பாதைக்கு அருகில் உள்ளது.
இந்த மாதத்திற்கான கப்பலின் வருகைக்கு ஜூலை 12 ஆம் தேதி ஒப்புதல் அளித்ததாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"இதையடுத்து, மேலதிக ஆலோசனைகளின் தேவையின் வெளிச்சத்தில், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மேற்படி கப்பலின் வருகையை ஒத்திவைக்க, கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு அமைச்சகம் தகவல் தெரிவித்தது" என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த மாத இறுதியில், சீன கப்பலின் திட்டமிடப்பட்ட வருகையை கண்காணித்து வருவதாக இந்தியா கூறியது. மேலும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களின் பாதுகாப்பில் இந்தியா கவனம் செலுத்தும் என்றும் புதுடெல்லி கூறியது. இந்தியாவும் இலங்கை அரசிடம் வாய்மொழியாக எதிர்ப்பு தெரிவித்தது.
கப்பல் தொடர்பான சர்ச்சை குறித்து கேட்டதற்கு, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் வழக்கமான செய்தி மாநாட்டில், இலங்கையுடனான சீனாவின் உறவுகள் "மூன்றாம் தரப்பினரை இலக்காகக் கொள்ளவில்லை" என்று கூறினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இமயமலை எல்லையில் நடந்த ஆயுத மோதல்களில் குறைந்தது 20 இந்திய மற்றும் நான்கு சீன வீரர்கள் கொல்லப்பட்டதில் இருந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் சிதைந்துள்ளன.
சீனாவும் இந்தியாவும் தனது சுதந்திர வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கையில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சித்தன, இருப்பினும் இந்தியா மற்ற எந்த நாட்டையும் விட இந்த ஆண்டு இலங்கைக்கு அதிக உதவிகளை வழங்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil