முகநூல் பதிவால் தாக்குதலுக்கு உள்ளான 3 மசூதிகள்... சமூக வலைதளங்களை முடக்கிய இலங்கை அரசு!

தற்போது நிலவரம் சீரடைந்தாலும், எங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தில் இஸ்லாமியர்கள்

தற்போது நிலவரம் சீரடைந்தாலும், எங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தில் இஸ்லாமியர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sri Lanka Chilaw mosque attack

Sri Lanka Chilaw mosque attack

Sri Lanka Chilaw mosque attack : கடந்த ஏப்ரல் 21ம் தேதியன்று மூன்று தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இலங்கையில் நடத்தப்பட்டது. இதில் 250க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Advertisment

நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்த்துவர்களுக்கும் இடையே மிகவும் கசப்பான மனப்போக்கு நிலவி வருகிறது. இதனை வெளிப்படையாக பதிவிடும் வண்ணம் அங்கு சிலர் முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப்பில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

சிலாவ் பகுதியில் மசூதி தாக்குதல்

கிறித்துவர்கள் அதிகம் வாழும் பகுதியான சில்லாவ் (Chilaw) பகுதியை சேர்ந்த 38 வயது மிக்கவர் அப்துல் ஹமீது முகமது ஹஸ்மர். “ஒரு நாளும் எங்களை நீங்கள் அழ வைக்க இயலாது” என்று கூறி இஸ்லாமிய மக்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் ஒரு முகநூல் பதிவு, பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அவர் பதிலுரைக்கும் வகையில், “மிகவும் சிரிக்க வேண்டாம். நீங்கள் ஒரு நாள் அழ வேண்டியது இருக்கும்” என்று கூறியிருந்தார்.

Advertisment
Advertisements

இந்த முகநூல் பதிவு சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிலாவ் பகுதியில் இருக்கும் மூன்று மசூதிகள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்லாமியர்கள் வைத்திருக்கும் கடைகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது நிலவரம் சீரடைந்தாலும், எங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடைபெறலாம் என்று வருத்தத்துடன் ஒரு இஸ்லாமிய இளைஞர் ரெய்ச்சர்ஸ் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து அங்கு சமூக வலை தளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் செயலிகளை முடக்கி உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு. புனித ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு வலுவான நடவடிக்கைகளை எடுத்து உண்மையான கலவரக்காரர்களையும், குற்றவாளிகளையும் கண்டறியாமல் தோல்வி அடைந்துவிட்டது இலங்கை அரசு என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

மேலும் படிக்க : ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

Sri Lanka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: