இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு யார் காரணம்? விசாரணையை தீவிரப்படுத்தும் அரசு!

இந்த அமைப்பிற்கு தேவையான உதவிகளை வெளியில் இருந்து செய்து வரும் நபர்கள் யார் என்ற கோணத்திலும் விசாரணை

Sri Lanka Easter Sunday Attacks NIA Shared numbers of five locals linked to IS with Sri Lanka
Sri Lanka Easter Sunday Attacks NIA Shared numbers of five locals linked to IS with Sri Lanka

Arun Janardhanan, Nirupama Subramanian

Sri Lanka Easter Sunday Attacks : ஏப்ரல் 21ம் தேதி இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 290 நபர்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சங்கரி லா விடுதியில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியவர் இலங்கையில் உள்ள மிகப் பெரிய தொழில் அதிபரின் மகன் என்று தெரிய வந்துள்ளது.

இலங்கையின் அமைச்சர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனரத்தினே நேற்று கொழும்புவில் பேசுகையில், இந்த 8 தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு இலங்கையில் செயல்பட்டு வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் (National Thowheeth Jamaath (NJT)) என்ற அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Sri Lanka Easter Sunday Attacks – தீவிரமடையும் விசாரணை

மேலும் இந்த அமைப்பிற்கு தேவையான உதவிகளை வெளியில் இருந்து செய்து வரும் நபர்கள் யார் என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். இவ்வளவு சிறிய அமைப்பு இவ்வளவு பெரிய நாச வேலைகளை இந்த நாட்டில் செய்ய இயலுமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றோம். வெளிநாட்டில் இருந்து இவர்களுக்கு உதவியர்களைப் பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுநாள் வரையில் இந்த நாச வேலைகளுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஏப்ரல் 11ம் தேதி காவல்துறை உயர் அதிகாரி விடுத்திருந்த எச்சரிக்கை அறிவிப்பில், உள்நாட்டில் இயங்கி வரும் நேஷனல் தவ்ஹீத் ஜமாத்தின் பெயர் இடம் பெற்றிருந்தது.

புலனாய்வுத் துறை மூலமாக, ஏப்ரல் 4ம் தேதியே, தொடர் வெடி குண்டு தாக்குதல்கள் தொடர்பான ரகசியத் தகவல்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அதிபர் மற்றும் பிரதமருக்கு இடையேயான பேச்சுவார்த்தையின்மையால், இந்த தகவல்கள் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை.  சேனரத்னே மேலும், இலங்கை அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட மிக மோசமான விளவு இது. ஆனால் அனைவரும் அதிபரை குறை கூறுகின்றார்கள்.

மேலும் படிக்க : இந்தியா எச்சரிக்கை செய்தும், இலங்கையின் பாதுகாப்புகள் தகர்த்தப்பட்டது ஏன் ?

அதிபரின் ஆலோசகர் கூறும் கருத்து

அதிபர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆலோசகர் ஷிரல் லக்திலகா கூறூகையில், இந்த தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் உண்மையான நோக்கம் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை. கடந்த காலத்திலும் கூட, தெற்காசியாவில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளான லஷ்கர் – இ – தொய்பா மற்றும் ஐ.எஸ் அமைப்புகள் இலங்கையை தாக்கியது இல்லை. 2008ம் ஆண்டு, மும்பையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட போதும் கூட இலங்கை மிக பாதுகாப்பாகவே இருந்தது. ஆரம்பகட்ட விசாரணையில், இந்த பகுதியில் தங்களின் நிலைப்பாட்டினை உறுதி செய்ய இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம்.

சேனரத்னே போல் அல்லாமல், அந்த அமைப்பின் பெயரை கூற மறுத்துவிட்டார் அதிபரின் ஆலோசகர். ஆனாலும் வெளிநாட்டினரின் உதவி இவர்களுக்கு கிடைக்கப்பட்டிருக்கும் என்பதை அடிகோடிட்டு காட்டியுள்ளார் அவர்.

இலங்கையில் நடைபெற்ற 8 தாக்குதல்களில் 7 தாக்குதல்கள் தற்கொலைப்படைத் தாக்குதல்கள் ஆகும். அதில் 6 நபர்களின் மேல் இதுவரை எந்தவிதமான க்ரிமினல் வழக்குகள் ஏதும் இல்லை.  இந்த வருடத்தின் ஆரம்பத்தில் புட்டளம் பகுதியில் வெடி பொருட்கள் வைத்திருந்த காரணத்திற்காக 4 நபர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவர் பின்பு விடுவிக்கப்பட்டிருந்தார்.

நேற்று நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் காவல்துறை, ராணுவம், மற்றும் கப்பற்படையினருக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சிறையில் அடைக்கவும் அவர்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இன்று இலங்கை பாராளுமன்றத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.

சர்வதேச காவல்துறையினர் இந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான விசாரணையில் இலங்கை குழுவிற்கு உதவி செய்வார்கள் என்று தெரிவித்துள்ளது. இலங்கை தரப்பு கேட்கும் அனைத்துவிதமான உதவிகள் மற்றும் தரவுகளை வழங்க நாங்கள் தயார உள்ளோம் என்று இண்டெர்போல் செக்ரட்டரி ஜெனரல் சர்ஜென் ஸ்டாக் கூறியுள்ளார்.

Web Title: Sri lanka easter sunday attacks government looks at home terror cell

Next Story
Sri Lanka Church Bomb Blasts: தேடத் தேட சிக்கும் வெடிப் பொருட்கள்… 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு! மீண்டும் ஊரடங்கு உத்தரவு!Sri Lanka Serial Bomb Blasts Live Updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express