இலங்கை தாக்குதலில் கேரள பெண் பலி : அந்நாட்டுனான 80 வருட உறவினை நினைவு கூறும் உறவினர்கள்

இந்த குடும்பத்தில் பிறந்த அனைவருக்கும் இரட்டை குடியுரிமை உண்டு.

Sri Lanka Easter Sunday Bomb Blasts Kerala Woman Died : கேரளா காசரகோட் பகுதியில் உள்ளது மோக்ரல் புதூர் என்ற கிராமம். அதில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் எஸ்.பி.சய்நுதீன் மற்றும் அவருடைய சகோதரர் அப்பாஸ்.

இலங்கையுடனான 80 வருட உறவு

1940ம் ஆண்டு அவர்கள் இலங்கையில் உள்ள வவுனியாவிற்கு தொழில் துவங்கும் நோக்கத்தோடு குடியேறினார்கள். பின்பு அவருடைய சய்நுதீனின் மகன் பி.எஸ். அப்துல்லா அந்த தொழில்களை தொடர்ந்து இலங்கையில் மேற்கொண்டு வந்தார்.

அவருக்கு பிறந்த குழந்தைகள் தான் ரசீனா மற்றும் பஷீர். இருவரும் அங்கு பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் காசரகோட்டில் வாழத்துவங்கினர். அவர்களுடைய அப்பா இறந்து போக, வவுனியாவிற்கு சென்று தொழிலை மேற்கொண்டார் பஷீர். இந்த குடும்பத்தில் பிறந்த அனைவருக்கும் இரட்டை குடியுரிமை உண்டு.

சமீபத்தில் தன்னுடைய சகோதரரை பார்ப்பதற்காக இலங்கை சென்றுள்ளார் ரசீனா மற்றும் அவருடைய கணவர். அவருடைய கணவர் காதர் குக்கடி துபாயில் தொழில் அதிபராக உள்ளார். அவரை விமானநிலையத்திற்கு சென்று துபாய்க்கு அனுப்பி வைத்த பின்னர் சங்ரி – லா விடுதிக்கு சென்றுள்ளார்.

அவர் இன்று மாலை கிளம்பி மங்களூர் செல்வதாக இருந்த நிலையில், விடுதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். அவருக்கு வயது 61 ஒன்றாகும்.  அவரின் இறுதி சடங்கிற்காக அமீரகம், மற்றும் இதர பகுதிகளில் இருந்து உறவினர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் படிக்க : இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு யார் காரணம்? விசாரணையை தீவிரப்படுத்தும் அரசு!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close