Advertisment

இலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர், காவல்துறை தலைவர் கைது

போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்த காரணாத்தால் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்ற ரீதியில் இருவரும் கைது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sri Lanka Easter Sunday bomb blasts

Sri Lanka Easter Sunday bomb blasts

Sri Lanka Easter Sunday bomb blasts police chief, former defence secretary arrested : ஏப்ரல் 21ம் தேதி உலகம் எங்கும் ஈஸ்டர் கொண்டாடப்பட்டது. தேவலாயங்களில் பொதுமக்கள் பலர் வழிபாட்டிற்காக சென்றிருந்து தங்களின் பிரார்த்தனைகளை கடவுளிடம் வைத்து மன்றாடிக் கொண்டிருந்தனர். இலங்கையிலும் இது போன்றே புனித ஞாயிறு கொண்டாடப்பட்டது. ஆனால் 9 மணிக்கு மேலாக தொடர்ச்சியாக 6 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 3 தேவாலயங்கள் முற்றிலுமாக சேதமடைந்தது. நட்சத்திர விடுதிகள் 3லும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கோர தீவிரவாத தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர்.

Advertisment

இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன் கடமையை செய்ய தவறிவிட்டதாக அன்றைய பாதுகாப்புத்துறை செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இலங்கை காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

இவர்கள் இருவரையும் கைது செய்யக் கோரி ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உடல் நிலை சரியில்லை என்பதை காரணமாக காட்டி இருவரும் தப்பித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இருவரையும் கைது செய்யக் கோரி மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நரஹென்பிட்டாவில் உள்ள காவலர்களுக்கான மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள் புஜித் ஜெயசுந்தராவை அதிரடியாக கைது செய்தது காவல்துறை. மேலும் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமஸ்ரீ பெர்னாண்டோவையும் கைது செய்தனர்.

இவர்கள் இருவரையும் ஏற்கனவே அந்நாட்டின் பாராளுமன்ற கமிட்டி விசாரணை நடத்தியது. அதில் பாதுகாப்பு குறித்து நிகழ்ந்த தவறுகள் குறித்து விசாரிக்கப்பட்டன. இருப்பினும் பாராளுமன்றத்தின் இந்த நடவடிக்கை, அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேனவிற்கு அதிருப்தியையே கொடுத்துள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது ஏன் இவ்வாறு பாராளுமன்ற கமிட்டியில் தனி விசாரணை நடத்த வேண்டும் என்று கேள்வி கேட்டார்.

மேலும் படிக்க : ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment