Sri Lanka Serial Bomb Blasts: இலங்கையில் நேற்று(ஏப்.21) காலை, புனித ஞாயிறுக்காக தேவாலயத்தில் பக்தர்கள் கூடியிருந்த நேரத்தில் தொடர்ச்சியாக குண்டு வெடித்தது. இலங்கையில் நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்ற இந்த கொலை வெறி தாக்குதலில் ஒவ்வொரு நொடிக்கும், பலி எண்ணிக்கை கூடியவாறே உள்ளது.
இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
நேற்று காலை வரை வெறும் 6 குண்டு வெடிப்புகள் மட்டுமே நிகழ்ந்திருந்த நிலையில், மதிய வேளையில் மேலும் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி, நாராயண் சந்திரசேகர் மற்றும் ரமேஷ் உள்ளிட்ட மூவர் பலியானதை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி செய்தார்.
Sri Lanka Serial Bomb Blasts
இன்று காலை மேலும் இருவர் பலியானதை உறுதி செய்தார் சுஷ்மா ஸ்வராஜ். ஹனுமந்தராயப்பா மற்றும் ரங்கப்பா என்பது அவர்களின் பெயர்களாகும்.
நேற்று காலையில் இருந்து இலங்கையில் நடைபெற்ற ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள
Live Blog
இந்த தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’
கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடிப்பு #SriLankaBlasts #Srilanka pic.twitter.com/1vsWzbcJhJ
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 22 April 2019
நேற்று சுஷ்மா ஸ்வராஜ், இலங்கையில் பலியான இந்தியர்களின் பெயர்களை பட்டியலிட்டர். நேற்று மூவர் உயிரிழிந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று இருவர் உயிரிழந்தை அவர் உறுதி செய்துள்ளார்.
ரமேஷ், நாராயணன் சந்திரசேகர், மற்றும் லட்சுமி (தன்னுடைய முதல் ட்வீட்டில் லோகாஷினி என்று குறிப்பிட்டு பிறகு திருத்தம் அளித்துள்ளார் சுஷ்மா ஸ்வராஜ் ) ஆகியோர் இறந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது.
Indian High Commission in Colombo has conveyed that National Hospital has informed them about the death of three Indian nationals. Their names are Lokashini, Narayan Chandrashekhar and Ramesh. We are ascertaining further details. /3
— Chowkidar Sushma Swaraj (@SushmaSwaraj) 21 April 2019
கே.ஜி. ஹனுமந்தராயப்பா மற்றும் எம். ரங்கப்பா என்ற இரண்டு இந்தியர்கள் உயிரிழந்தை உறுதி செய்தார் சுஷ்மா ஸ்வராஜ்
@SushmaSwaraj
We sadly confirm the deaths of the following two individuals in the blasts yesterday:
- K G Hanumantharayappa
-M Rangappa.— India in Sri Lanka (@IndiainSL) 22 April 2019
நேற்று நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செய்யும் வண்ணமாக , பிரான்ஸில் இருக்கும் ஈஃபிள் டவர் முழுவதும் இருக்கும் மின்விளக்குகள் அனைக்கப்பட்டன.
#WATCH France: The Eiffel Tower in Paris went dark at the midnight, as a tribute to those who lost their lives in the serial bombings in Sri Lanka on 21st April. More than 200 people died & 450 were injured in the bombings that took place in churches & hotels of the country,y'day pic.twitter.com/w2ScUB7ua0
— ANI (@ANI) 22 April 2019
தேவாலயங்கள் மற்றும் விடுதிகளில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 138 பேருக்கும் அதிகமானோர் மரணம், 600க்கும் மேற்பட்டோர் படுகாயம். அமெரிக்க மக்கள் இலங்கை மக்களுக்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம். உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
138 people have been killed in Sri Lanka, with more that 600 badly injured, in a terrorist attack on churches and hotels. The United States offers heartfelt condolences to the great people of Sri Lanka. We stand ready to help!
— Donald J. Trump (@realDonaldTrump) 21 April 2019
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான பாரக் ஒபாமா நேற்று இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இலங்கைக்கு வந்த சுற்றுலாவினர் மீதும், ஈஸ்டர் திருநாள் அன்று பிரார்த்தனைக்கு வந்த பக்தர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அவர் அறிவித்துள்ளார். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், இலங்கையின் மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்கின்றோம் என்றும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
The attacks on tourists and Easter worshippers in Sri Lanka are an attack on humanity. On a day devoted to love, redemption, and renewal, we pray for the victims and stand with the people of Sri Lanka.
— Barack Obama (@BarackObama) 21 April 2019
ஊடகவியலாளர் நிருபமா சுப்ரமணியன் இது குறித்து எழுதிய கட்டுரைய முழுமையாக படிக்க !
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights