Advertisment

Sri Lanka Church Bomb Blasts: தேடத் தேட சிக்கும் வெடிப் பொருட்கள்... 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு! மீண்டும் ஊரடங்கு உத்தரவு!

இலங்கையில் உள்ள இந்தியர்களின் நிலைப் பற்றி அறிந்திட இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும் 947779-03082, 94112-422788, 94112-422789.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sri Lanka Serial Bomb Blasts Live Updates

Sri Lanka Serial Bomb Blasts Live Updates

Sri Lanka Serial Bomb Blasts: இலங்கையில் நேற்று(ஏப்.21) காலை, புனித ஞாயிறுக்காக தேவாலயத்தில் பக்தர்கள் கூடியிருந்த நேரத்தில் தொடர்ச்சியாக குண்டு வெடித்தது. இலங்கையில் நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்ற இந்த கொலை வெறி தாக்குதலில் ஒவ்வொரு நொடிக்கும், பலி எண்ணிக்கை கூடியவாறே உள்ளது.

Advertisment

இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

நேற்று காலை வரை வெறும் 6 குண்டு வெடிப்புகள் மட்டுமே நிகழ்ந்திருந்த நிலையில், மதிய வேளையில் மேலும் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.  இந்த குண்டு வெடிப்பில் இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி, நாராயண் சந்திரசேகர் மற்றும் ரமேஷ் உள்ளிட்ட மூவர் பலியானதை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி செய்தார்.

Sri Lanka Serial Bomb Blasts

இன்று காலை மேலும் இருவர் பலியானதை உறுதி செய்தார் சுஷ்மா ஸ்வராஜ். ஹனுமந்தராயப்பா மற்றும் ரங்கப்பா என்பது அவர்களின் பெயர்களாகும்.

நேற்று காலையில் இருந்து இலங்கையில் நடைபெற்ற ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள

Live Blog

இந்த தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



























Highlights

    17:12 (IST)22 Apr 2019

    மீண்டும் குண்டுவெடிப்பு

    கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

    11:14 (IST)22 Apr 2019

    Sri Lanka Serial Bomb Blasts Live Updates : மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த ஐவர் நிலை என்ன ?

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஐவர் பெங்களூருவில் இருந்து இலங்கை சென்றுள்ளனர். அவர்களை இது வரை தொடர்பு கொள்ள இயலவில்லை என உறவினர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    10:26 (IST)22 Apr 2019

    மேலும் இரண்டு இந்தியர்கள் பலி

    நேற்று சுஷ்மா ஸ்வராஜ், இலங்கையில் பலியான இந்தியர்களின் பெயர்களை பட்டியலிட்டர். நேற்று மூவர் உயிரிழிந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று இருவர் உயிரிழந்தை அவர் உறுதி செய்துள்ளார். 

    ரமேஷ்,  நாராயணன் சந்திரசேகர், மற்றும்  லட்சுமி (தன்னுடைய முதல் ட்வீட்டில் லோகாஷினி என்று குறிப்பிட்டு பிறகு திருத்தம் அளித்துள்ளார் சுஷ்மா ஸ்வராஜ் ) ஆகியோர் இறந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது. 

    கே.ஜி. ஹனுமந்தராயப்பா மற்றும் எம். ரங்கப்பா என்ற இரண்டு இந்தியர்கள் உயிரிழந்தை உறுதி செய்தார் சுஷ்மா ஸ்வராஜ்

    10:16 (IST)22 Apr 2019

    இரங்கலை தெரிவித்த ஈஃபிள் டவர்

    நேற்று நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செய்யும் வண்ணமாக , பிரான்ஸில் இருக்கும் ஈஃபிள் டவர் முழுவதும் இருக்கும் மின்விளக்குகள் அனைக்கப்பட்டன. 

    10:11 (IST)22 Apr 2019

    ஊரடங்கு உத்தரவு நீக்கம்

    நேற்று தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த உடனே ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இன்று காலை 6 மணி அளவில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

    10:10 (IST)22 Apr 2019

    24 நபர்கள் இது வரை கைது

    காவல்துறை செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 24 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் இதர தகவல்களை அளிக்க மறுத்துவிட்டார் அவர்.

    10:08 (IST)22 Apr 2019

    290ஐ தொட்டது பலி எண்ணிக்கை

    நேற்று 8 இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல்களில் இதுவரை 290 பேர் மரணமடைந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    10:06 (IST)22 Apr 2019

    பாதுகாப்பு பணிகள் தீவிரம்

    நேற்று அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சூழலில்,  இணைய சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பண்டாரநாயகே சர்வதேச  விமான நிலையம் பயணிகளுக்காக சேவைகளை தொடர்ந்த வண்ணம் உள்ளது. 

    09:53 (IST)22 Apr 2019

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டனம்

    தேவாலயங்கள் மற்றும் விடுதிகளில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 138 பேருக்கும் அதிகமானோர் மரணம், 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்.  அமெரிக்க மக்கள் இலங்கை மக்களுக்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம். உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கின்றோம். 

    09:50 (IST)22 Apr 2019

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கடும் கண்டனம்

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான பாரக் ஒபாமா நேற்று இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.  இலங்கைக்கு வந்த சுற்றுலாவினர் மீதும், ஈஸ்டர் திருநாள் அன்று பிரார்த்தனைக்கு  வந்த பக்தர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அவர் அறிவித்துள்ளார். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், இலங்கையின் மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்கின்றோம் என்றும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

    புலிகளின் தாக்குதல்கள் அதிகமாக நடத்தப்பட்ட காலத்திலும், தேவாலயங்கள் இலக்காக வைக்கப்படவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களில் பலர் கிறித்துவர்கள் என்பது இதற்கு ஒரு முக்கிய காரணம்.  ஆனால் உலக அளவில் தேவாலயங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

    ஊடகவியலாளர் நிருபமா சுப்ரமணியன் இது குறித்து எழுதிய கட்டுரைய முழுமையாக படிக்க !

    Sri Lanka
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment