தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பகல்நேர பராமரிப்பு மையத்தில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உட்பட குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகளின் தகவல்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் முன்னாள் போலீஸ் அதிகாரி என்றும், துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்றும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது துப்பாக்கியால் சுட்டவர், அவரது மனைவி மற்றும் குழந்தையைச் சுட்டுக்கொன்று, தானும் சுட்டுக்கொண்டதாக காவல்துறை அதிகாரி ராய்ட்டர்ஸிடம் உறுதிப்படுத்தினார். அவர் கடந்த ஆண்டு காவல்துறையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: கலிஃபோர்னியாவில் பயங்கரம்; இந்திய வம்சாவளி 8 மாத பெண் குழந்தை உள்பட 4 பேர் கொலை!
/tamil-ie/media/media_files/uploads/2022/10/thailand-shooting-AP10_06_2022_000123A-0002.jpg)
உயிரிழந்தவர்களில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உள்ளடங்குவதாக போலீசார் தெரிவித்தனர். 34 பேர் கொல்லப்பட்டதைத் தவிர குறைந்தது 12 பேர் காயமடைந்தனர்.
Nongbua Lamphu நகரின் மையப்பகுதியில் மதியம் துப்பாக்கி ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
தாய்லாந்தைத் தளமாகக் கொண்ட பாங்காக் போஸ்ட்டில் வந்த ஒரு செய்தி, துப்பாக்கியால் சுட்டவர் காவல்துறை அதிகாரி Panya Khamrab என்று அடையாளம் காட்டியது, மேலும் அவர் குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்குள் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை எடுத்துச் சென்று, அத்துமீறி நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/311044991_186708033862742_8098617225123944162_n.jpg)
போதைப்பொருள் தொடர்பான காரணங்களுக்காக அவர் காவல் சேவையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக காவல்துறையை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மதிய உணவு நேரத்தில் துப்பாக்கி ஏந்திய நபர் வந்தபோது சுமார் 30 குழந்தைகள் மையத்தில் இருந்தனர். எட்டு மாத கர்ப்பிணியான ஒரு ஆசிரியர் உட்பட நான்கு அல்லது ஐந்து ஊழியர்களை அவர் முதலில் சுட்டுக் கொன்றதாக மாவட்ட அதிகாரி ஜிடாபா பூன்சம் கூறினார்.
மேலும், "முதலில் மக்கள் அதை பட்டாசு என்று நினைத்தார்கள்," என்றும் அவர் கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/thailand-shooting-AP10_06_2022_000128B-0004.jpg)
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் வடகிழக்கு மாகாணமான நோங் புவா லாம்புவில் உள்ள உதாய் சவான் நகரின் மையத்தில் இரத்த வெள்ளத்தில் கிடக்கும் குழந்தைகளின் உடல்கள் மூடப்பட்ட கவர்களைக் காட்டியதாக அறிக்கை கூறியது.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/thailand.jpg)
பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தாய்லாந்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது, ஆனால் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத ஆயுதங்கள் இல்லை, அவற்றில் பல, பல ஆண்டுகளாக சண்டையால் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளிடமிருந்து நுண்ணிய எல்லைகளைத் தாண்டி கொண்டு வரப்பட்டுள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/thailand-shooting-AP10_06_2022_000121B-0001.jpg)
வெகுஜன துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரிதானவை, ஆனால் 2020 ஆம் ஆண்டில், சொத்து ஒப்பந்தம் காரணமாக கோபமடைந்த ஒரு சிப்பாய் குறைந்தது 29 பேரைக் கொன்றார் மற்றும் 57 பேர் காயமடைந்தனர், இது நான்கு இடங்களில் பரவியது.
(கூடுதல் தகவல்கள் : AP, ராய்ட்டர்ஸ்)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/suicide-help.jpg)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil