கொரோனா தடுப்பு மருந்து : நாளை மனிதர்களிடம் சோதனை நடத்துகிறது ஆக்ஸ்ஃபோர்ட்

இந்த சோதனை வெற்றி அடைந்தால் உடனே பிரிட்டிஷில் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு செலுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

By: Updated: April 22, 2020, 09:05:07 PM

UK human trials for coronavirus vaccine to begin on Thursday : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் தங்களிடம் இருக்கும் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை வைத்து தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே பில்கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனம் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் அமைந்திருக்கும் ஆக்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டறிந்த தடுப்பூசியை நாளை மனிதர்களுக்கு செலுத்த உள்ளது. இது தொடர்பாக நேற்று பேசிய இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் (Matt Hancock) அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டார்.

மேலும் படிக்க : கோயில் அர்ச்சகர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய முஸ்லீம்கள்

இதுவரை வேறெந்த நாடுகளும் ஒதுக்காத அளவு நிதியை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை குழுவிற்காக ஒதுக்கியுள்ளதாக் அவர் அறிவித்துள்ளார். இந்த சோதனை வெற்றி அடைந்தால் உடனே பிரிட்டிஷில் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு செலுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும் தடுப்பூசி சோதனை எனப்படுவது ட்ரையல் அண்ட் எரர் நடைமுறை தான். இந்நடைமுறைப்படித்தான் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Uk human trials for coronavirus vaccine to begin on thursday

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X