கோயில் அர்ச்சகர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய முஸ்லீம்கள்

ஒற்றுமையுடன் நாங்கள் இருக்கின்றோம் அதனால் தான் கோவில் அர்ச்சகர்களுக்கும் நாங்கள் உதவி செய்தோம் - அறக்கட்டளை நிர்வாகி

By: Updated: April 22, 2020, 09:05:45 PM

Muslim charity organization provides relief goods to Hindu temple priests Tanjore : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியா முழுவதும் பொதுநிகழ்ச்சிகள், பொது வழிபாடு, போக்குவரத்து என மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளுக்கும் / செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள், கோவில் நிகழ்வுகள் என அனைத்திற்கும் தற்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் கோவில் அர்ச்சகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் படிக்க : கடமை முக்கியம் : தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்காத யோகி; தாய்க்கு மன்னிப்பு கடிதம்

தஞ்சையில் அவர்களின் நிலையை புரிந்து கொண்ட இஸ்லாமியர்கள் கோவில் குருக்கள்களுக்கு உதவி செய்து வருகின்றனர். தஞ்சை அய்யங்கடை தெரு பள்ளிவாசல் இமாம் முகமது ருஸ்தும் அலியின் ஏற்பாட்டின் படி, ரசா – இ – முஸ்தபா அறகக்ட்டளை சார்பில் தஞ்சை வடக்கு வீதியில் உள்ள 15 இந்து கோவில் அர்ச்சகர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நாங்கள் உதவி வருகின்றோம். சாதி மதம் பார்க்க இது நேரமில்லை. ஒற்றுமையுடன் நாங்கள் இருக்கின்றோம் அதனால் தான் கோவில் அர்ச்சகர்களுக்கும் நாங்கள் உதவி செய்தோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் படிக்க : காட்டு வழிப் பயணம் : சொந்த ஊரை நெருங்கும் போது மரணமடைந்த 12 வயது சிறுமி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Muslim charity organization provides relief goods to hindu temple priests tanjore

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X