உக்ரைனின் லீவிவ் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் கிருஷ்ணன் கெளசிக் லீவிவ் நகரில் இருந்து நேரடியாக செய்திகளை வழங்கி வருகிறார்.
போலந்தில் அமெரிக்க அதிபர் பைடன் பேச்சுவார்த்தைக்கு பிறகு, லிவிவ் நகர மேயர் ஆண்ட்ரிய் சடோவ்யி கூறுகையில், அமெரிக்க அதிபர் பைடன் போலந்து வந்துள்ள நிலையில் அவருக்கு ஹலோ சொல்லும் விதமாக ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளது" என்றார்.
லிவிவ் நகரில் 4.45 மணியளவில் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. நேஷனல் அகாடெமிக் ஓபெரா மற்றும் பல்லெட் தியேட்டர் முன் ஓபெரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை நமது செய்தியாளர் படம்பிடித்துக் கொண்டிருந்தபோதே வானிலிருந்து சைரன் சப்தம் கேட்பதும் பதிவாகியுள்ளது.
இது ஏதோ தவறுதலாக ஒலித்துவிட்டது என்று கருதிய உக்ரைனிய மக்கள் அதை கண்டுகொள்ளாமல் இருந்தனர். அப்போது திடீரென தாக்குதல் நடந்தது. இதையடுத்து மக்கள் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.
எண்ணெய் கிடங்கு அல்லது தொலைத்தொடர்பு கோபுரம் ஆகியவற்றில் ஏதோ ஒன்று தாக்குதலுக்கு ஆளாகி சிதைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு பிறகு லிவிவ் மேயர் ஆண்ட்ரி வெளியிட்ட டுவிட்டில், ராணுவத் தரப்பிலிருந்து இன்னும் தகவல் கிடைக்கவில்லை. யாரும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம். பாதுகாப்பான இடங்களில் இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் தாக்குதலில் சிலர் மட்டும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலந்து எல்லையில் இருந்து 70 கி.மீ. தொலைவில் லிவிவ் அமைந்துள்ளது.
பாக்., பிரதமரின் யூடியூப் பெயர் மாற்றம்.. 10 நாட்களுக்கு பிறகு அமெரிக்கரை விடுவித்த ரஷ்யா.. மேலும் செய்திகள்
கடந்த 13ஆம் தேதியும் ரஷ்யா படையினரால் இந்நகரம் தாக்குதலை எதிர்கொண்டது. சனிக்கிழமை அன்று இந்நகரில் நடத்தப்பட்டுள்ள ஏவுகணை தாக்குதல் மூலம் ரஷ்ய படைகள், உக்ரைனின் மேற்கு பகுதியை குறிவைத்துள்ளது தெளிவாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil