scorecardresearch

போருக்கு நடுவே வயலின் வாசித்த பெண்.. இன்ஸ்டாகிராம் சேவையை முடக்கிய நாடு.. மேலும் செய்திகள்

உக்ரைனில் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்துகொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் வயலின் வாசித்தது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

போருக்கு நடுவே வயலின் வாசித்த பெண்.. இன்ஸ்டாகிராம் சேவையை முடக்கிய நாடு.. மேலும் செய்திகள்

உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்ய டென்னிஸ் வீரர்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ். இவர் உக்ரைன் போரில் அமெரிக்காவும், நேட்டோவும் செயல்பட அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், உக்ரைன் போரில் அமெரிக்காவும் நேட்டோவும் ஒன்றும் செய்யாது என்று கேள்விப்படுகிறோம். புதினுக்கு இது சாதகமாக அமைகிறது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று அவர் கூறினார்.

நெதர்லாந்துக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட இந்தியர்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தன்னுடைய நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு பெரும் பங்கு அளித்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்க அரசின் பல்வேறு அதிகாரமிக்க பதவிகளை இந்திய வம்சாவளியினர் வகித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நெதர்லாந்துக்கான அமெரிக்க தூதராக இந்திய பெண்ணை ஜோ பைடன் நியமித்துள்ளார். அவர் காஷ்மீரில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவரும், அமெரிக்காவின் பிரபல அரசியல் செயற்பாட்டாளருமான ஷெபாலி ரஸ்தான் துகல் (வயது 50) ஆவார்.

குண்டுவெடிப்புக்கு மத்தியில் வயலின் வாசித்த இளம்பெண்!

உக்ரைனில் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்துகொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் வயலின் வாசித்தது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் மீது கடந்த 18 நாட்களாக ரஷ்யா போர் புரிந்து வருகிறது. உக்ரைன் ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைத்து தாக்குவதாக முதலில் கூறிய ரஷ்யா தற்போது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும் கூட தாக்குதலை நடத்தி வருகிறது.

சர்வதேச நாடுகள் சமரசம் செய்ய முயற்சி எடுத்துவரும் நிலையில், ரஷ்யா இறங்கி வராமல் மோதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் குடியிருப்புக்குக் கீழே உள்ள பதுங்கு குழியில் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள தஞ்சமடைந்த இளம்பெண் ஒருவர் வயலின் வாசித்த வீடியோ வெளியானது.

யூ-டியூப் தளத்தில் முன்னணி செய்தி சேகரிப்பு நிறுவனங்கள் இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளது.

இன்ஸ்டாகிராம் சேவையை நிறுத்தியது ரஷ்யா

ரஷியா தங்கள் நாட்டில் இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவதாக அறிவித்துள்ளது. திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் இன்ஸ்டாகிராம் சேவை முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பலகோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல சமூக வலைத்தளங்களான ‘பேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ தங்கள் தளத்தில் வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சு தொடர்பான பதிவுகளை சகித்துக்கொள்ள மாட்டோம் எனகூறி அவற்றை நீக்குவதோடு, அந்த பதிவுகளை வெளியிடுவோரின் கணக்குகளையும் முடக்கி வருகின்றன.

ரஷ்யா மீதான தடைக்கு பிறகு, கச்சா எண்ணெய்க்கு ஈரான் & வெனிசுலாவை நாடும் அமெரிக்கா

இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷிய அதிபர் புதின், அந்த நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் ரஷியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிறநாட்டு தலைவர்களுக்கு எதிராக வெறுப்பு பதிவுகளை வெளியிட அனுமதிப்பதாக ‘பேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ நிறுவனங்கள் நேற்று முன்தினம் அறிவித்தன.

இதனால் ஆத்திரமடைந்த ரஷியா தங்கள் நாட்டில் இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவதாக அறிவித்துள்ளது.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Ukraine war issue women played violin russia war instagram bans

Best of Express