Advertisment

விலங்குகளுக்காக உயிரை பயணம் வைக்கும் உக்ரைன் பெண்... உலகச் செய்திகள் சில

காசாவில் போராளிக் குழு தளபதி வான்வெளி தாக்குதலில் பலி; சீனா போர் பயிற்சியை நிறுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐப்பான் வலியுறுத்தல்; விலங்குகளுக்காக உயிரை பயணம் வைக்கும் உக்ரைன் பெண்... இன்றைய உலகச் செய்திகள்

author-image
WebDesk
New Update
விலங்குகளுக்காக உயிரை பயணம் வைக்கும் உக்ரைன் பெண்... உலகச் செய்திகள் சில

Ukrainian risks life for animals, China military exercise near Taiwan today world news: இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.

Advertisment

காசாவில் போராளிக் குழு தளபதி வான்வெளி தாக்குதலில் பலி

பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழு, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தெற்கு காசா பகுதிக்கான தனது உயர்மட்ட தளபதி கொல்லப்பட்டதாகக் கூறியது, இஸ்ரேல் ஈரானிய ஆதரவு குழுவின் வடக்கு காசாவின் தளபதியை வான்வழித் தாக்குதலில் கொன்ற ஒரு நாளுக்குப் பிறகு, 2021 இல் 11 நாள் போர் முடிவடைந்ததிலிருந்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய போராளிகள் இடையே மோசமான எல்லை தாண்டிய மோதலைத் தூண்டியது.

publive-image

தெற்கு காசா நகரமான ரஃபாவில் நடந்த வான்வழித் தாக்குதலில் தளபதி கலீத் மன்சூர் மற்றும் இரண்டு சக போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்லாமிய ஜிஹாதின் அல்-குடா பிரிகேட்ஸ் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.

இதையும் படியுங்கள்: இலங்கை துறைமுகத்துக்கு சீன ஆய்வு கப்பல் வருகையை தள்ளிவைக்க கோரிக்கை..இந்தியாவின் அழுத்தம் காரணமா?

ரஃபாவில் பல வீடுகளை தரைமட்டமாக்கிய வான்வழித் தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் மூன்று பெண்கள் உட்பட மேலும் ஐந்து பொதுமக்களும் கொல்லப்பட்டதாக அமைப்பு கூறியது.

சீனா போர் பயிற்சியை நிறுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐப்பான் வலியுறுத்தல்

தைவான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைபே பயணத்தைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட இராணுவப் பயிற்சிகளை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சீனாவை வலியுறுத்தியுள்ளன.

publive-image

82 வயதான நான்சி பெலோசி, 25 ஆண்டுகளில் தைவானுக்குச் சென்ற மிக உயர்ந்த அமெரிக்க அரசப்பதவி வகிக்கும் தலைவர் ஆவார். கடந்த புதனன்று நான்சி பெலோசியின் வருகையும் ஜனாதிபதி சாய் இங்-வென் மற்றும் பிற தலைவர்களுடனான அவரது சந்திப்புகளும் சீனாவை ஆத்திரமடையச் செய்துள்ளன, சீனா சுயராஜ்ய ஜனநாயக தீவான தைவானை அதன் நிலப்பகுதியாகக் கருதுகிறது, அது வலுக்கட்டாயமாக கூட மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என விரும்புகிறது.

நான்சி பெலோசியின் தைபே பயணத்திற்கு பதிலடியாக பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளை சீனா ஆரம்பித்து, ​​தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சரமாரியாக வீசி வருகிறது.

விலங்குகளுக்காக உயிரை பயணம் வைக்கும் உக்ரைன் பெண்

உக்ரைனைச் சேர்ந்த நடாலியா போபோவா வாழ்க்கையில் ஒரு புதிய நோக்கத்தைக் கண்டுபிடித்தார்: அது உக்ரைனில் நடந்த போரினால் ஏற்படும் அழிவிலிருந்து காட்டு விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளை மீட்பது.

"அவர்கள் என் வாழ்க்கை," என்று 50 வயதான நடாலியா ஒரு பூனைக்குட்டியைப் போன்ற லேசான உரோமம் கொண்ட சிங்கத்தை தடவுகிறார். ஒரு கூண்டுக்குள் இருந்து, சிங்கம் தன் பாதங்களைத் தன் பராமரிப்பாளரை நோக்கி நீட்டி, அவர் கொஞ்சுவதைக் கண்டு மகிழ்கிறது.

நடாலியா போபோவா, யுஏ அனிமல்ஸ் என்ற விலங்கு பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து, ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட விலங்குகளை போரிலிருந்து காப்பாற்றியுள்ளார்; அவற்றில் 200 விலங்குகள் வெளிநாடு கொண்டு செல்லப்பட்டன், மேலும் 100 விலங்குகள் மேற்கு உக்ரைனில் புதிய இருப்பிடத்தில் வைக்கப்பட்டுள்ளன, இது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. அவற்றில் பல காட்டு விலங்குகளாக இருந்தன, அவற்றின் உரிமையாளர்கள் ரஷ்ய ஷெல் மற்றும் ஏவுகணைகளிலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு அவை தனியார் வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டன.

கீவ் பிராந்தியத்தில் Chubynske கிராமத்தில் நடாலியா தங்குமிடத்தில் இப்போது 133 விலங்குகள் உள்ளன. இதில் 13 சிங்கங்கள், ஒரு சிறுத்தை, ஒரு புலி, மூன்று மான்கள், ஓநாய்கள், நரிகள், ரக்கூன்கள் போன்ற வனவிலங்குகளும் மற்றும் ரோ மான்கள் மற்றும் குதிரைகள், கழுதைகள், ஆடுகள், முயல்கள், நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் போன்ற வளர்ப்பு விலங்குகளும் அடங்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment