US President Donald Trump impeached : அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது மற்றும் சபையை தவறாக வழிநடத்தியது ஆகிய காரணங்களால் டொனால்ட் ட்ரெம்பின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. 2020ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரெம்புக்கு எதிராக களம் இறங்குகிறார் ஜோய் பைடன். இவர் குறித்து விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் நாட்டு அதிபரை டொனால்ட் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி இம்பீச்மெண்ட் வழக்கினை பதிவு செய்தார்.
Advertisment
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...
அந்நாட்டு மக்கள் பிரதிநிதிகள் சபையில் (US House of Representatives) அமெரிக்க அதிபருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டத்து. அந்த தீர்மானத்தை ஆதரித்து 216 பேர் வாக்களித்துள்ளனர். ட்ரெம்புக்கு ஆதரவாக 163 நபர்கள் வாக்களித்துள்ளனர். இதனால் ட்ரெம்ப்பின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. அவர் தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்வாரா போன்ற விவகாரங்களை இனிமேல் தான் பார்க்க வேண்டும்.
Advertisment
Advertisements
பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த தீர்மானம் செனட் சபைக்கு செல்லும். அங்கு அதிபரின் குடியரசு கட்சியை (Republican Party) சேர்ந்த உறுப்பினர்கள் 53 நபர்கள் உள்ளனர். ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் (Democrats) 47 (2 சுயேட்சை கட்சி உறுப்பினர்கள் உட்பட) நபர்கள் உள்ளனர். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் 66 நபர்கள் டொனால்ட் ட்ரெம்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அதாவது டொனால்டின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் 20 பேர் இந்த தீர்மானத்திற்கு அதரவாக வாக்களித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
இதற்கு முன்பு யாராவது விசாரணையின் மூலமாக நீக்கப்பட்டுள்ளனரா?
இதுவரை அப்படி யாரும் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால் 1968ம் ஆண்டு ஆண்ட்ரூ ஜான்சன் மீதும், 1998ம் ஆண்டு பில் கிளிண்டன் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் செனெட் சபை, குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அவர்களை பதவியில் இருந்து நீக்க மறுத்துவிட்டது. 1974ம் ஆண்டு ரிச்சர் நிக்சன் என்ற அதிபர், சபை அவரை பதவியில் இருந்து நீக்கும் முன்பே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.