Religious Freedom Watchdog Pitches Adding India to Blacklist
Religious Freedom Watchdog Pitches Adding India to Blacklist : சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் இந்த ஆண்டுக்கான அறிக்கையை 28ம் தேதி வெளியிட்டது. உலக நாடுகளில், சிறுபான்மையினரின் நலன் குறித்து அக்கறை காட்டாத நாடுகளின் பட்டியலை வெளியிட்டு, இந்நாடுகளின் செயல்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் பர்மா, சீனா, இந்தியா, ஈரான். எரித்ரியா, வடகொரியா, நைஜீரியா, பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் மத சுதந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து நிறுவப்பட்டது தான் இந்த USCIRF ஆணையம். 1998ம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸ் இந்த சர்வதேச ஆணையத்தை உருவாக்கியது.
Countries of Particular Concern in #USCIRFAnnualReport2020: Burma, China, Eritrea, India, Iran, Nigeria, North Korea, Pakistan, Russia, Saudi Arabia, Syria, Tajikistan, Turkmenistan, and Vietnam
2004ம் ஆண்டுக்கு பிறகு, இந்த பட்டியலில் இந்தியா தற்போது இடம் பிடித்துள்ளது. 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, இந்த பட்டியலில் இந்தியா இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சமீபத்தில் பெரும் பிரச்சனையை கிளப்பிய சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரத்தை வழங்கிய இந்திய அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்கியது உள்ளிட்ட காரணங்களால இந்த பின்னடைவை சந்தித்துள்ளது இந்தியா.
இந்தியா இதற்கு முன்பு State Under Watch List என்ற இரண்டாம் பட்டியலில் இருந்தது. தற்போது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய நாடுகள் (Countries of particular concern) என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
28ம் தேதி வெளியிடப்பட்ட USCIRF அறிக்கையில் “ குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் ”நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேடு நிறைவு அடையும் போது லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் தடுப்புக்காவல், நாடு கடுத்தப்படுதல் மற்றும் நாடற்ற நிலையை அடையும் அபாயம் ஏற்படும்.” என்று மேற்கோள் காட்டியுள்ளது அந்த ஆணையம்.
The Citizenship (Amendment) Act in #India “potentially exposes millions of Muslims to detention, deportation, and statelessness when the government completes its planned nationwide National Register of Citizens” USCIRF Vice Chair @nadinemaenza#USCIRFAnnualReport2020
இந்த பட்டியல் ஒரு சார்பு உடையதாக இருக்கிறது. இது போன்று அமெரிக்கா, இந்தியாவை கறுப்பு பட்டியலில் வைப்பது ஒன்றும் புதிதில்லை என்று கூறியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக்.
சீனா மற்றும் வடகொரியா போன்ற சர்வாதிகார ஆட்சியை இந்தியா நடத்தவில்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடு தழுவிய என்.ஆர்.சி.யை எதிர்கட்சியினர், எம்.பி.க்கள், சிவில் சொசைட்டிகள், மற்றும் பல்வேறு முக்கிய அங்கம் வகிக்கும் குழுக்களின் முன்பு வைக்கப்பட்டு, விவாதங்களுக்கு பிறகு தான் சட்டம் கொண்டு வரப்பட்டது என்று டென்ஜின் டோர்ஜி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“