Advertisment

துபாய் எக்ஸ்போவை பார்த்தவர்கள் எண்ணிக்கை.. சமையல் எண்ணெயில் பறந்த விமானம்.. மேலும் செய்திகள்

மரியுபோலில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
துபாய் எக்ஸ்போவை பார்த்தவர்கள் எண்ணிக்கை..  சமையல் எண்ணெயில் பறந்த விமானம்.. மேலும் செய்திகள்

இலங்கையில் ஊரடங்கை மீறி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

Advertisment

இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்த இருந்த நிலையில், இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவானது அமலில் இருக்கும் என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. அதன்படி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி கொழும்புவில் மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், இருட்டையும் பொருட்படுத்தாமல் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

துபாய் எக்ஸ்போவை பார்த்தவர்கள் எண்ணிக்கை

துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 கண்காட்சியை 2 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளனர்.

துபாய் நகரில் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் முதன் முறையாக எக்ஸ்போ 2020 கண்காட்சி கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நடந்தது. இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஓமன், சவுதி அரேபியா உள்ளிட்ட 192 நாடுகள் பங்கேற்றன.

மனங்களை இணைத்து, எதிர்காலத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் நடந்த இந்த சர்வதேச கண்காட்சி உலகின் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. நாள்தோறும் இந்த கண்காட்சியை அமீரகம் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பார்வையிட்டனர்.

அந்த வகையில் மொத்தம் 182 நாட்கள் நடந்த இந்த கண்காட்சியை 2 கோடியே 41 லட்சத்து 2 ஆயிரத்து 967 பேர் பார்வையிட்டுள்ளனர் என்று ஊடகச் செய்தியில் தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் நடந்த இந்த எக்ஸ்போ 2020 கண்காட்சி மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. இது ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழும் வகையில் இருந்துள்ளது.

அமீரகத்தின் 50-வது ஆண்டு தேசிய தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில் இந்த கண்காட்சி வரலாற்றில் முக்கியமான இடத்தை வகிக்கும். இத்தகைய சிறப்பான உலக கண்காட்சியை நடத்துவதற்கு ஆதரவு அளித்த அமீரக தலைவர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மரியுபோலில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் செஞ்சிலுவை சங்கம்

மரியுபோலில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா 38-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

ரஷிய போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மரியுபோல் நகரில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை வெளியேற்றுவதற்கு அந்நகரத்திற்கு செல்லும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோல் நகரத்தை விட்டு வெளியேறும் மக்களுக்கு உதவும் நடவடிக்கை தொடர்கிறது என்று தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு நட்புக் கரம்: 40,000 டன் அரிசி அனுப்புகிறது இந்தியா

சமையல் எண்ணெயில் பறந்த விமானம்!

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான சூப்பர்ஜம்போ விமானம் சமையல் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட எரிபொருளில் 3 மணி நேரம் பறந்தது.

ஐரோப்பிய நிறுவனம் தயாரித்த இந்த விமானம், பிரான்ஸ் நாட்டில் டவுலஸ் நகரில் இந்தச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது.

ரோல்ஸ் ராய்ஸ் என்ஜின் சமையம் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட எரிபொருளை பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டது.

சமையல் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் எரிபொருளைப் பயன்படுத்தி விமானத்தை முழுமையாக இயக்குவதற்கான அனுமதியை அடுத்த 10 ஆண்டில் பெறுவோம் என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment