சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது பல மடங்கு வேகமாக பரவி வருகிறது.
ஷாங்காய் நகரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 வாரங்கள் இந்த கடுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா காரணமாக கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை உள்ளது.
ஷாங்காய் நகரில் கொரோனா ஊரடங்கு காரணமாக, ஷாங்காய் நகரில் செயல்பட்டு வரும் இந்திய துணைத் தூதரகம், தற்காலிகமாக தனது சேவைகளை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
அங்கு தூதரக சேவைகளை நேரடியாக வழங்கும் நிலையில் இல்லை என சீன தலைநகர் பீஜிங்கில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது. பணியாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே முக்கிய அலுவலக பணிகளை மேற்கொள்வர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை-பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்
பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை தேவை-பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்
பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனையும், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினையும், இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும், வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சந்தித்து 2 பிளஸ் 2 பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் முடிவில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், “பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்தப்பகுதியும், பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு, உடனடியாக நீடித்த மற்றும் மாற்ற முடியாத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2 பிளஸ் 2 பேச்சு வார்த்தையின்போது பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் சுரங்கபாதையில் துப்பாக்கிச் சூடு; 23 பேர் காயம்
தென்ஆப்பிரிக்காவில் 2 புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டுபிடிப்பு
தென்ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட, ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது.
அந்த வகையில், தற்போது பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் எக்ஸ்.இ. என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்த 2 புதிய ஒமைக்ரான் வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா தொற்றுநோய் தடுப்பு மையத்தின் இயக்குனர் துலியோ டி ஒலிவேரா கூறுகையில் “தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அவற்றுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ளன.
நைஜீரியாவில் கொள்ளை கும்பல் துப்பாக்கிச்சூடு: 70 பேர் கொன்று குவிப்பு
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் அந்த நாட்டு படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க அங்கு பல்வேறு ஆயுதமேந்திய கொள்ளை கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில், நைஜீரியாவின் மத்திய மாகாணமான பிளாடீயூவின் தலைநகர் ஜோஸ் நகரில் உள்ள 4 கிராமங்களுக்குள் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் புகுந்தது.
மோட்டார் சைக்கிள்களில் சென்ற 100-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் வீடுகளில் இருந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட அனைவரையும் வீதிக்கு தரதரவென இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “