Advertisment

போலந்தில் அமெரிக்க துணை அதிபர்.. ஆஸி.யில் நீடிக்கும் கன மழை.. மேலும் செய்திகள்

வார்னர் மீடியா ரஷ்யாவில் அனைத்து புதிய வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
போலந்தில் அமெரிக்க துணை அதிபர்.. ஆஸி.யில் நீடிக்கும் கன மழை.. மேலும் செய்திகள்

போர் விமானங்கள் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இன்று போலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.

Advertisment

இந்த பயணத்தின் போது உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களுக்கு போலாந்து அடைக்கலம் கொடுத்து வருவதற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், உக்ரைனின் ரஷியா நடத்தி வரும் படையெடுப்பு எல்லையில் அமைந்துள்ள போலாந்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால், போலாந்துக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்ற உறுதியை வெளிப்படுத்தும் வகையில் துணை அதிபர் கமலா ஹாரிசின் இந்த வருகை அமைந்துள்ளதாக கருத்தப்படுகிறது.

இதுகுறித்து கமலா ஹாரிஸ் டுவிட்டவரில் பதிவும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் தொடர்ந்து மீண்டும் அதிகரித்துவரும் கொரோனா

உலகில் முதன் முதலாக சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது.

இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக் காட்டத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது. 

உக்ரைன் போர்: டிஜிட்டல் கடலில் தனியாக தத்தளிக்கும் ரஷ்யா

செர்னோபில் அணு உலையில் கதிர்வீச்சு அபாயம்: உக்ரைன் அரசு எச்சரிக்கை

செர்னோபில் அணு உலையில் மின்வசதிகளைத் தரும் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் விரைந்து அதைச் சரி செய்யாவிட்டால் அணு எரிபொருள் சேமிப்பு வசதியின் குளிரூட்டும் அமைப்புகளிலிருந்து அதிகப்படியான கதிர்வீச்சு வெளியேறும் அபாயம் இருப்பதாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் 'ரஷியாவின் இந்த ஆபத்தான நடவடிக்கைகள் ஐரோப்பாவை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது' எனக் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, ரஷியப் படைகள் செர்னோபிலைக் கைப்பற்றியபோது அங்கிருந்து அதிகப்படியான கதிர்வீச்சு வெளியாவதாக உக்ரைன் அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் கன மழை:

பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

பெருமழை ஆஸ்திரேலியாவை நிலைகுலைய செய்து வருகிறது. அந்த நாட்டின் கிழக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட 3-வது நகரமும், குயின்ஸ்லாந்தின் தலைநகருமான பிரிஸ்பேன் மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்டினி ஆகிய இரு நகரங்களும் கனமழையால் பேரழிவு விளைவுகளை எதிர்கொண்டு வருகின்றன.

கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2,500-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் வெள்ளம் வடியாத சூழலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஷியாவில் அனைத்து சேவையையும் தற்காலிகமாக நிறுத்தியது வார்னர் மீடியா

மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களான பெப்சி, கோகோ கோலா, மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகியவை ரஷியாவில் தங்களின் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தன.

இந்நிலையில், வார்னர்மீடியா ரஷ்யாவில் அனைத்து புதிய வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவில் ஏற்கனவே சிஎன்என் ஒளிபரப்புகளை நிறுத்தியதோடு, வார்னர்மீடியாவின் வார்னர் பிரதர்ஸ் ரஷ்யாவில் “தி பேட்மேன்” திரைப்படத்தை வெளியிடாமல் நிறுத்தியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment