ஊடுருவ முயன்ற ரஷ்யா.. உஷாரான உக்ரைன் ராணுவம்
உக்ரைன் ராணுவத்தினருடன் புத்திசாலித்தனமாக ரஷ்ய ராணுவத்தினர் நுழைவதை தடுப்பதற்காக அந்நாட்டு ராணுவம் மாற்று யோசனையை கையாண்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 18 நாட்கள் கடந்துவிட்டன. தொடர்ந்து குண்டு மழை பொழிந்துவரும் ரஷ்யா, உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டுகிறது.
இந்நிலையில், உக்ரைன் ராணுவத்தினர் சக நாட்டு ராணுவத்தினர் மற்றும் ஆயுதம் ஏந்தி நாட்டுக்காக போராடிவரும் பொதுமக்களை அடையாளம் காண்பதற்காக கையில் ராணுவ உடுப்பின் மீது கையில் மஞ்சள் நிற பட்டையை அணிந்திருந்தனர்.
இதை தெரிந்து கொண்ட ரஷ்ய ராணுவத்தினர் மஞ்சள் நிற பட்டையை அணிந்து உக்ரைன் ராணுவத்தினருடன் ஊடுருவ முயன்றனர்.
இதையடுத்து, உஷாரடைந்த உக்ரைன் ராணுவத்தினர் தற்போது நீல நிற பட்டையை அணிந்து வருகின்றனர். ஆயுதம் ஏந்தி போராடும் உக்ரைன் மக்களையும் நீல நிற பட்டையை அணிய அறிவுறுத்தியுள்ளனர்.
யானை திருவிழாவை கொண்டாடிய நாடு
ஆசிய நாடான தாய்லாந்தில் ஆண்டுதோறும் யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யானைகள் தினம் திருவிழா போன்று கொண்டாடப்படும்.
யானைகள் அதிகம் உள்ள நாடு என்பதால் அந்நாட்டின் தேசிய விலங்கும் யானை தான்.
50 க்கும் அதிகமான யானைகளுக்கு விருந்து படைக்கப்பட்டது. பழங்ககள் அதிக அளவு ஓரிடத்தில் கொட்டப்பட்டு சுற்றிலும் யானைகள் பழங்களை ருசித்து சாப்பிட்டது.
உலக அமைதி வேண்டி தீ மிதித்த ஜப்பானியர்கள்!
ஜப்பானில் தீ மிதி திருவிழா வெகு விமரிசையாக சமீபத்தில் நடைபெற்றது. ஹிவாதாரி மத்சுரி என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த திருவிழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
கரிகளைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டிருந்த தீப்பாதையில் பலர் வெறும் காலுடன் நடந்து பிரார்த்தனை செய்தனர். விரைவில் கொரோனா முடிவுக்கு வர வேண்டும் என்றும் உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்று மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
ருமேனியாவில் உக்ரேனியர்களுக்காக பாடிய பிரிட்டன் பாடகர்
தாமஸ் பீட்டர் ஓடெல் என்பவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். பாடலாசிரியர் மற்றும் பாடகர். இவரது பல ஆல்பங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றனர். இவருக்கு இளைஞர்கள் ரசிகர்கள் மிக அதிகம்.
இந்நிலையில், போர் காரணமாக உக்ரைனிலிருந்து வெளியேறி ருமேனியாவில் தஞ்சமடைந்த அகதிகள் மத்தியில் அவர் பாடினார். அவர் 2013 ஆம் ஆண்டில் வெளியிட்ட அனதர் லவ் என்ற ஆல்பம் பாடலை பாடினார்.
இந்தப் பாடல் உக்ரைனில் நிலவும் அமைதியின்மையின் அடையாளமாக சமூக வலைதளங்களில் மாறிப் போனது.
Tom Odell sings at the North Railway Station in Bucharest for Ukrainian refugees#StandWithUkraine 🇺🇦 pic.twitter.com/twM6OcANzX
— Boris Blue Eyes (@RFboris) March 11, 2022
20 லட்சத்துக்கும் அதிகமானோர் உக்ரைனிலிருந்து அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
போருக்கு நடுவே வயலின் வாசித்த பெண்.. இன்ஸ்டாகிராம் சேவையை முடக்கிய நாடு.. மேலும் செய்திகள்
புகாரெஸ்ட் ரயில் நிலையத்தில் நான் நேற்று பாடியதை பெருமையாக நினைக்கிறேன். தினமும் அந்த ரயில் நிலையத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரேனிய அகதிகள் வருகின்றனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், பாதுகாப்பான இடம் தேவை. அவர்கள் மனிதத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என்று டிக்டாக்கில் டாம் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.