ஜெர்மனி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பிய 96 வயது முதியவர் ரஷ்ய ராணுவத்தின் குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
உக்ரைனை சேர்ந்தவர் போரிஸ் ரோமன்சென்கோ (96). இவர் கார்கிவ் நகரில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய ராணுவம் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் இவர் உயிரிழந்தார்.
இத்தகவலை உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஹிட்லரிடம் இருந்து தப்பி புதினால் (ரஷ்ய அதிபர்) கொல்லப்பட்டுள்ளார் போரிஸ் என்றும் அவர் கூறியுள்ளார்.
சீனாவில் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா மூடல்
கொரோனா தொற்று அதிகரிப்பால் சீனாவில் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா காலவரையின்றி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த டிஸ்னி நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்காக்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அந்த வகையில் சீனாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட பெரிய நகரமான ஷாங்காய் நகரில் பிரமாண்டமான டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.
இந்நிலையில், சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஷாங்காய் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவை காலவரையின்றி மூடுவதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு நிதியமைச்சர்.. இப்போது கார் ஓட்டுநர்..!
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து முந்தைய அரசின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உயிர் பயத்தில் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறினர்.
அப்படி ஆப்கனில் நிதியமைச்சராக இருந்த காலித் பயெண்டா தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கார் ஓட்டுநராக அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். இந்தச் செய்தி வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியானது.
2 ஆயிரம் குழந்தைகளை ரஷ்யா கடத்திச் சென்றுவிட்டது:
உக்ரைன் குற்றச்சாட்டு
போரின் போது உக்ரைன் நாட்டை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை ரஷியா கடத்தியுள்ளதாக உக்ரைன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா வசம் உள்ள டான்பாஸ் பகுதியில் இருந்து 2,389 குழந்தைகள் ரஷ்யாவிற்கு சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்டுள்ளளதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் 133 பேருடன் சென்ற போயிங் விமானம் மலையில் விழுந்து விபத்து
ரஷ்யா தனது படையெடுப்பில் குழந்தைகளை தொடர்ச்சியாக குறிவைப்பதாக உக்ரைன் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்த நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil