பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக இமானுவேல் மேக்ரான் அதிபராக தேர்வாகி உள்ளார்.
பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வரும் இமானுவேல் மேக்ரானின் பதவி காலம் முடிவடைந்ததையடுத்து 12-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு 2 சுற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நதாலி ஆர்தாட், நிக்கோலஸ் டூபோன்ட், ஆன் ஹிடால்கோ, யானிக்ஜடோட், ஜீன்லஸ்ஸல், மரைன் லி பென் உள்பட 12 பேர் களமிறங்கினர். பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி 2 சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
கொரோனா-குணமடைந்தோர் எண்ணிக்கை 46.20 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 94 லட்சத்து 68 ஆயிரத்து 263 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 12 லட்சத்து 17 ஆயிரத்து 84 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 கோடியே 20 லட்சத்து 8 ஆயிரத்து 291 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 42 ஆயிரத்து 888 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி நாட்கள்: தலிபான்கள் புதிய அறிவிப்பு
காபூல் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி நாட்கள் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தலீபான்கள் புதிய ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு கெடுபிடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்கள்.
பல்கலைக்கழகங்களில், மாணவ, மாணவிகள் சேர்ந்து படிப்பதை தடுக்கும் வகையில், மாணவிகள் காலை நேரத்திலும், மாணவர்கள் பிற்பகல் நேரத்திலும் வர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இலங்கை பிரதமர் வீடு சுற்றிவளைப்பு: மாணவர்கள் அதிரடி போராட்டம்
இலங்கை பிரதமர் வீட்டை சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கோரி நேற்று 16-வது நாளாக போராட்டம் நீடித்தது. இடைக்கால அரசு அமைக்கும் கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்சே நிராகரித்தார்.
இந்தநிலையில், கொழும்பு நகரில் விஜேரமா மவாத்தா பகுதியில் உள்ள மகிந்த ராஜபக்சே இல்லத்தை பல்கலைக்கழக மாணவ கூட்டமைப்பு சார்பில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் சுற்றி வளைத்தனர். காம்பவுண்டு சுவர் மீதும் ஏறினர். ‘வீட்டுக்கு போ, ராஜபக்சே’ என்று சுவரில் எழுதினர்.
மலை பகுதியில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த மலையக தமிழர்கள் நேற்று கொழும்புக்கு வந்து காலிமுக பகுதியில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போலீசார் கொழும்பு நகரில் பல சாலைகளில் தடுப்புகளை வைத்திருந்தனர்.
கொரோனா அப்டேட்.. இலங்கைக்கு உதவும் இந்தியா.. மேலும் செய்திகள்
அந்த தடுப்புகளை மனித உரிமை ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டனர். போராட்டக்காரர்கள் நுழையக்கூடாது என்பதற்காக கோர்ட்டு உத்தரவின்பேரில் தடுப்பு வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.