Weight Loss reasons : உடல் எடை அதிகரிப்பதற்கு பின்னணியில் சில ஆச்சரியமளிக்கும் காரணங்கள் மறைந்திருக்கிறது. இவற்றை பல நேரங்களில் நாம் கண்டு கொள்ளாமல், உடல் எடையை குறைக்கும் திட்டத்தில் தீவிரமாக இருப்பீர்கள்.
நம் அனைவருக்கும் உடலை கட்டுக்கோப்புடன், ஆரோக்கியமாக வைத்திருக்க அனைவருமே விருப்பப்படுவோம். மெதுவாக உடல் எடை அதிகரிப்பது என்பது ஒரு பிரச்சனையாக இருக்கும். அதுவும் அது ஏன் என்ற காரணம் தெரியாமல் இருக்கும் போது மண்டையடியாக இருக்கும்.
உடற்பயிற்சி, டயட், பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்கள் உண்ணுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு உடல் எடையை குறைக்க நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் முயன்று பார்ப்போம். உடல் எடையை குறைப்பதில் இது நல்ல பலனை கண்டிப்பாக அளிக்கும்.
இருப்பினும் உடல் எடையை குறைப்பதில் என்னதான் முயற்சி செய்தாலும் கூட சிலருக்கு அதில் வெற்றி கிடைப்பதில்லை. அவர்கள் ஈடுபடும் டையட் மற்றும் பயிற்சிகளுக்கு இணையாக எதிர்ப்பார்த்த பலன் கிடைப்பதில்லை.
Most Common Reasons Why You are Not Losing Weight: இதுதான் காரணமா?
இதனால் அவைகள் நம்பிக்கை இழந்து போவார்கள். இதனால் உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சில ரசாயன மாத்திரைகளை உட்கொள்ளும் அளவிற்கு கூட வந்து விடுவார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிக்கக்கூடும். அனைத்து முயற்சிகளுக்கு பின்னும் உடல் எடை குறையாமல் போவதை கருத்தில் கொண்டு, உங்களுக்கு சில ரகசியங்களை நாங்கள் கூறப்போகிரோம்.
உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன? உடல் எடையை குறைக்க நீங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தால், உடல் எடை அதிகரிப்புக்கு பின்னால் மறைந்திருக்கும் காரணங்களை பற்றி இப்போது பார்க்கலாமா?
அரிசி டயட்' மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா?
1. தூக்கமின்மை:
தூக்கமின்மை ஏற்படும் போது உடலில் அழுத்தம் ஏற்படும் செயல்முறை தொடங்கி விடும். இதனால் உடலில் கொழுப்பு தேங்கி விடும். மேலும் தூக்கமின்மை உண்டாகும் போது அதிகமாக நொறுக்குத் தீனிகளை உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். இது ஹார்மோன் அளவுகளில் மாற்றத்தையும் ஏற்படுத்தும். இதனால் பசியும் எடுக்கும் பசி எடுக்காமலும் போகும். எவ்வளவு தான் சாப்பிட்டாலும் வயிறு நிறையாது.
2. உணவு பழக்கம்:
உணவுகளில் உள்ள சில மூலப்பொருட்களால் சிலருக்கு எரிச்சல் ஏற்படும். அதற்கு காரணம் அவ்வகை உணவுகள் என்றால் அவர்களுக்கு அலர்ஜியாக இருக்கும். அலர்ஜியை உண்டாக்கும் பொதுவான உணவுகளில் இரண்டு தான் பசுவின் பால் மற்றும் க்ளூட்டன் (கோதுமை, பார்லி, கம்பு மற்றுறம் சில ஓட்ஸ்களில் காணப்படும் புரதம்). இவைகளை உண்ணுவதால் அழற்சி, வீக்கம் மற்றும் உடல் எடை அதிகரிக்கு
3. மன அழுத்தம் :
உடல் அல்லது மன ரீதியான காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உடல் எடை அதிகரிக்கும். அதற்கு காரணம், அந்த வலியை ஈடுகட்ட கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன் வெளிப்படும். இதனால் உங்கள் பசி அதிகரிக்கும். மேலும் வேலையில் அழுத்தம் ஏற்படுபவர்களுக்கும் கூட இந்த நிலை ஏற்படலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.