ஜான்வி கபூரைப் போல 3 நாட்கள் தூங்காமல் இருந்தால் உடலுக்கு என்ன ஆகும்? வல்லுநர்கள் விளக்கம்

"நான் அப்படிப்பட்ட குழந்தையாக இருந்தேன். இந்தப் பாடல் குறித்து மிகவும் பதற்றமாக இருந்தேன். பிரகாசமான வெளிச்சத்தில் எவ்வாறு கண்களை முற்றிலும் திறந்து வைத்திருக்க வேண்டும் என நான் கற்றுக் கொள்ளவில்லை" என ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

"நான் அப்படிப்பட்ட குழந்தையாக இருந்தேன். இந்தப் பாடல் குறித்து மிகவும் பதற்றமாக இருந்தேன். பிரகாசமான வெளிச்சத்தில் எவ்வாறு கண்களை முற்றிலும் திறந்து வைத்திருக்க வேண்டும் என நான் கற்றுக் கொள்ளவில்லை" என ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Jahnavi

'ரூஹி' திரைப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் கடந்ததையும், தனது முதல் தனி நடனத்தையும் அண்மையில் நடிகை ஜான்வி கபூர் கொண்டாடினார். அந்த சயமத்தில் தான் உறக்கம் இல்லாமல் இருந்தது குறித்து ஜான்வி கபூர் நினைவு கூர்ந்தார். "ரூஹி திரைப்படமும், எனது முதல் தனி நடனமும் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் அப்படிப்பட்ட குழந்தையாக இருந்தேன். இந்தப் பாடல் குறித்து மிகவும் பதற்றமாக இருந்தேன். பிரகாசமான வெளிச்சத்தில் எவ்வாறு கண்களை முற்றிலும் திறந்து வைத்திருக்க வேண்டும் என நான் கற்றுக் கொள்ளவில்லை. இப்பாடலுக்காக மூன்று நாட்கள் ஒத்திகை பார்த்தேன். 7 மணி நேரத்தில் இப்பாடலை முடித்து விட்டு உறக்கமே இல்லாமல் அடுத்த படப்பிடிப்பிறாக சென்றேன்" என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Here’s what happens to the body if you do not sleep for 3 days, like Janhvi Kapoor

 

Advertisment
Advertisements

மேலும், மூன்று நாட்கள் தான் உறங்காமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது போன்று மூன்று நாட்களுக்கு உறங்காமல் இருந்தால் நம் உடலுக்கு என்ன ஆகும் என்பதை அறிந்து கொள்ள வல்லுநர்களிடம் பேசினோம்.

 

 

மும்பையின் க்ளெனேகிள்ஸ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் மஞ்சுஷா அகர்வாலிடம் இது குறித்து கேட்டறிந்தோம். அப்போது, "மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேல் தொடர்ச்சியாக உறங்காமல் இருந்தால் அது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

"உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலம் என்று வரும்போது தூக்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கமின்மை உங்களுக்கு எரிச்சல், விரக்தி மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தும். உங்களுக்கு போதுமான தூக்கம் வரவில்லை என்றால், அது உங்கள் முழு நாளையும், வேலையையும் பாதிக்கலாம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான அறிகுறிகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார். "முதலில், நீங்கள் மிகவும் சோர்வாகவும், எரிச்சலாகவும், கவனம் செலுத்த முடியாமலும் உணர்வீர்கள். காலப்போக்கில், உங்கள் மூளை சரியாக செயல்படாமல் அல்லது தினசரி பணிகளைச் செய்ய சிரமப்படலாம். உங்கள் நோய் எதிர்ப்பு திறனை பலவீனப்படுத்துவதன் மூலம் உங்கள் உடல் இதற்கு எதிர்மறையாக எதிர்வினையாற்றலாம். இது உங்கள் நோய்வாய்ப்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்" என்று மருத்துவர் அகர்வால் தெரிவித்தார்.

உங்கள் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவையும் அதிகரிக்க வாய்ப்பு அதிகம். இது இதயம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். "இதனால்தான் உங்கள் தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது" என்று மருத்துவர் அகர்வால் குறிப்பிட்டார். ஒருவர் குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் நல்ல தூக்கத்தை இலக்காகக் கொள்ள வேண்டும்.

"நல்ல தூக்கத்திற்காக உறங்குவதற்கு முன் மொபைல் அல்லது லேப்டாப் போன்ற டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்களால் தூங்க முடியாவிட்டால் அல்லது தூங்குவதில் சிரமம் ஏற்பட்டால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப மருந்துகள் அல்லது வாழ்க்கை முறை மாற்றங்களை பரிந்துரைக்கலாம்" என்று டாக்டர் அகர்வால் பகிர்ந்து தெரிவித்தார்.

Best tips to maintain healthy sleep Janhvi Kapoor

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: