Advertisment

இதை தினமும் செய்தால் போதும்!!! உடல் எடை தானாகவே குறையும்..

செல்போனில் பேசிக்கொண்டே சாப்பிடுவது, நின்றுகொண்டு, நடந்துகொண்டு சாப்பிடுவது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
weight loss helping yoga's

weight loss helping yoga's

உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவானது குறையும். இதற்காக உணவை தவிர்க்கவும் கூடாது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும்.

Advertisment

அதிகம் சாப்பிட்டால் வயிறு தொப்பை போடும் என்று பலரும் கருதுகின்றனர்.அது அறவே தவறு. எடையைக் குறைப்பதற்காக நீங்கள் உணவைத் தவிர்த்துவந்தால், உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து மெலிந்துவிடுவீர்கள். அதனால் எடை குறையாது. நீர்ச்சத்து அவசியம் தேவை. எனவே தேவையான அளவு உணவை சாப்பிடுங்கள்.

சரி எதை செய்தால் உடல் எடை கட்டாயம் குறையும் என்று தெரிந்துக் கொள்வோமா..

1. பட்டினி கிடப்பதால், உங்களின் பசியின் தன்மை அதிகரிப்பதோடு அடுத்து சாப்பிடும் போது அதிக அளவில் உணவை சாப்பிட தோன்றும். ஒரு நாளில் குறைந்தது 3 ஆரோக்கியமான உணவு சாப்பிடவும், ஒரு ஆரோக்கியமான காலை உணவையும் சேர்த்து. உயர் கொழுப்பு மற்றும் அதிக கலோரி உள்ள உணவுகள் உண்பதை தவிர்க்க முயற்சி செய்யவும்.

2. செல்போனில் பேசிக்கொண்டே சாப்பிடுவது, நின்றுகொண்டு, நடந்துகொண்டு சாப்பிடுவது என இல்லாமல், தரையில் சப்பணம் இட்டுச் சாப்பிடுவோருக்கு உடல் பருமன், தொப்பை வரவே வராது.

3. தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வயிற்றை  நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.

4. நீங்கள் உண்மையில் குறைந்த பட்சம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரே நேரம் செய்ய முடியவில்லை என்றால் அதில் ஒரு தவறும் இல்லை, நீங்கள் நாள் முழுவதும் சிறு சிறு பகுதியாக பிரித்தும் செய்யலாம்.

5. மாலை நேரத்தில் கொஞ்சம் சுண்டல், கொஞ்சம் தேநீர் சாப்பிட்டால், இரவு உணவை கணிசமாகக் குறைக்கலாம்.

6. மன அழுத்தத்தினால், நீங்கள் சாப்பிடும் அளவு அதிகரிக்கிறது இதனால் தானாக உடல் எடை அதிகரிக்கிறது. எனவே மன அழுத்தத்தில் இருந்து விலகியே இருங்கள். மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர நீங்கள் பல்வேறு விதமான உத்திகளை முயற்சி செய்யலாம்.

7. இரவில் கேழ்வரகு ரொட்டி, கம்பு - சோள தோசை, முழுக்கோதுமையில் செய்த சப்பாத்தி... இப்படி ஏதாவது ஒன்றை உணவாகச் சாப்பிடலாம்.

8. பால், வெள்ளைச் சர்க்கரை, பிஸ்கட், குக்கீஸ், ஐஸ்க்ரீம், குளிர் பானங்கள், துரித உணவுகள், இனிப்புப் பண்டங்கள் பக்கமே போகக் கூடாது

Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment