குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது மட்டுமன்றி குடல் பகுதியின் இயக்கத்தை சீராக வைத்து பராமரிக்க கூடிய முக்கியமான ஒரு உணவு கொடுக்காப்புளி. அதன் மருத்துவ நன்மைகள் பற்றி விளக்குகிறார் மருத்துவர் மைதிலி.
குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது மட்டுமன்றி குடல் பகுதியின் இயக்கத்தை சீராக வைத்து பராமரிக்க கூடிய முக்கியமான ஒரு உணவு கொடுக்காப்புளி. அதன் மருத்துவ நன்மைகள் பற்றி விளக்குகிறார் மருத்துவர் மைதிலி.
கொடுக்காபுளியில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற ஊட்டச்சத்துகள் இருப்பதால் உடலில் பூஞ்சை மற்றும் வைரஸ் தொற்று பாதிப்பு, பாக்டீரியல் தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பைக் குறைத்து நோயெதிர்ப்பு தன்மையைப் பல மடங்கு அதிகரிக்கிறது.
Advertisment
வெள்ளை ரத்த அணுக்களினுடைய எண்ணிக்கை சம அளவில் பராமரிக்கும் தன்மை கொண்டது கொடுக்காபுளி. இதில் இருக்கக்கூடிய் கால்சியம், பாஸ்பரஸ் எலும்புகளை ஆரோக்கியமா செயல்பட வைக்கும். எலும்பு நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பையும் குறைக்கிறது. பல் வலி, பற்களில் ரத்தக் கசிவு, கேவிட்டி பிரச்னை வராமல் கூட தடுக்கும் தன்மை கொண்டது கொடுக்காபுளி என்கிறார் மருத்துவர் மைதிலி.
தசை பிடிப்பு பாதிப்பின் அறிகுறிகளை குறைக்கிறது கொடுக்காபுளி. இதில், நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால், குடல் பகுதியின் இயக்கத்தை சீராக வைத்து குடல் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பை குறைக்கிறது. செரிமான திறனையும் மேம்படுத்தி, மலசிக்கல் பிரச்னை பாதிப்பை கட்டுப்படுத்துகிறது.
3 முக்கிய நோய்களை கட்டுப்படுத்தும் கொடுக்காபுளி:
Advertisment
Advertisements
1. நீரிழிவு நோய்:
நீரிழிவு நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பை குறைக்கிறது கொடுக்காபுளி. உடலில் இன்சுலின் உற்பத்திய சீராக வைத்து ரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து பராமரிப்பதற்கு கொடுக்காபுளி உதவுகிறது. இதில், கிளைசிமிக் இன்டெக்ஸ் அளவு குறைவாகத் தான் உள்ளது. இதனால், நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களும் கொடுக்காபுளியை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார் மருத்துவர் மைதிலி.
2. புற்றுநோய்
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தூண்டக்கூடிய ஃப்ரீ ராட்களை எதிர்த்து குடல் புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் ஏற்படாமல் தடுக்கிறது கொடுக்காபுளி. நுரையீரல் புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் ஏற்படாமல் தடுத்து ஆரோக்கியமாக வாழ கொடுக்காபுளி உதவும் என்கிறார் மருத்துவர் மைதிலி.
3. உடல் பருமன்:
உடல் எடை அதிகமாக ஆரோக்கியமான முறையில பராமரிக்கிறது கொடுக்காபுளி. கொடுக்கா புளிய அன்றாட உணவில் சேர்ப்பதால் முகம் பிரகாசமாகும். இதில் தயாமின் என்ற ஊட்டச்சத்தும், வைட்டமின் சி-யும் இருப்பதால், சரும சுருக்கங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்தி முகத்தை பிரகாசமாக்கிறகு கொடுக்காபுளி. மேலும், முகப்பரு ஏற்படாமலும் தடுக்கிறது கொடுக்காபுளி என்கிறார் மருத்துவர் மைதிலி.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.