மூளையை சுறுசுறுப்பாக்கும், மாரடைப்பை தடுக்கும்… இந்த மீன் கிடைச்சா விட்றாதீங்க; டாக்டர் மைதிலி
வவ்வால் மீன் அன்றாட உணவில் அடிக்கடி எடுக்க வேண்டும். இதனால், எந்தெந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்? வவ்வால் மீனில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன? என்று விளக்குகிறார் மருத்துவர் மைதிலி.
வவ்வால் மீன் அன்றாட உணவில் அடிக்கடி எடுக்க வேண்டும். இதனால், எந்தெந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்? வவ்வால் மீனில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன? என்று விளக்குகிறார் மருத்துவர் மைதிலி.
மூளையை சுறுசுறுப்பாக்கும், மாரடைப்பை தடுக்கும்… இந்த மீன் கிடைச்சா விட்றாதீங்க; டாக்டர் மைதிலி
நமது மூளை உறுப்பு ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட வைத்து ஞாபக சக்தி பல மடங்கு அதிகப்படுத்தக்கூடிய முக்கியமான ஒருவகை மீன் வவ்வால். இந்த வவ்வால் மீன் அன்றாட உணவில் அடிக்கடி எடுக்க வேண்டும். இதனால், எந்தெந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்? வவ்வால் மீனில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன? என்று விளக்குகிறார் மருத்துவர் மைதிலி.
Advertisment
வவ்வால் மீன்களில் டி.ஹெச்.ஏ. என்ற முக்கியமான வேதிப்பொருளும் ஈ.பி.ஏ. என்று சொல்லக்கூடிய ஒமேகா 3 ச்த்துகளும் அதிக அளவில் உள்ளன. இது நமது உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்காமல் சமநிலையை பராமரிக்கும் தன்மை வவ்வால் மீன்களில் உள்ளது. இதனை சாப்பிடுவதால், இதயத்துக்கு போகக்கூடிய ரத்த ஓட்டம் சீரான முறையில் இயங்கும். இதனால், மாரடைப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு மிக குறைவு என்கிறார் மருத்துவர் மைதிலி.
மூளையை ஆரோக்கியமாவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட வைப்பதுடன் கண் பார்வை திறனை மேம்படுத்துகிறது வவ்வால் மீன். கண்கள் கூர்மை அடைய செய்யக்கூடிய டி.ஹெச்.ஏ. என்ற முக்கிய வேதிப்பொருள் அதிக அளவுல இருக்கு. மாலைக்கண் நோய் பாதிப்பு, கண்புரை, கண் அழுத்த நோய் என கண்பார்வை தொடர்பான எந்தவொரு நோய் பாதிப்பும் வரக் கூடிய வாய்ப்பு 50% கம்மி பண்ணிடும் வவ்வால் மீன் என்கிறார் மருத்துவர் மைதிலி.
டி.ஹெச்.ஏ. அதிகமா இருக்கக் கூடிய உணவுகளை அன்றாடம் சேர்த்து வரும்போது எலும்புகள் வலுவடையும். இதில் கால்சியம் ஊட்டச்சத்து அதிகளவில் உள்ளது. எலும்பு வலி, மூட்டு வலி, கை-கால் வலியை போக்குகிறது வவ்வால் மீன். ஆண்ட்டி ஆக்சிஜன் சத்து நமது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. எந்தவகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் வவ்வால் மீன்களில் இருக்கக்கூடிய ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் சத்துக்கள் ரொம்பவே உதவியா இருக்கும். குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், சரும புற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பை குறைக்கிறது.
Advertisment
Advertisements
குழந்தைகளுக்கு சிறிய வயதில் இருந்தே வவ்வால் மீன் சாப்பிட கொடுக்கும்போது, பிற்காலத்தில் நீரழிவு நோய், டைப்-2 டையபடஸ் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பை குறைக்கிறது. உடல் எடையை குறைப்பதில் இந்த வவ்வால் மீன் அன்றாட உணவுல சேர்க்கும்போது இயற்கையான முறையில் எந்த ஒரு பக்க விளைவும் இல்லாம ஆரோக்கியமான முறையில உடல் எடையை குறைக்க முடியும். பொதுவா மீன் உடல் எடையை கம்மி பண்றதுக்குதான் ரொம்பவே உதவியா இருக்கும். அதுலயும் இந்த வவ்வால் மீன் கெட்ட கொழுப்போட அளவை குறைக்கும். வவ்வால் மீனை கண்டிப்பா வாரத்துக்கு ஒரு முறை (அ) 10 நாட்களுக்கு ஒரு முறையாவது உணவில் சேர்க்க வேண்டும். இந்த வவ்வால் மீன் அன்றாட உணவில் சேர்ப்பவர்களுக்கு சருமம் பொழிவாகும். குறிப்பாக, சரும சுருக்கங்கள் வருவதை தாமதப்படுத்தி இளமை தோற்றத்தை நீடிக்க செய்யும் என்கிறார் மருத்துவர் மைதிலி.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.