ஜெய் ஆகாஷ்.... இவர் தான் இந்த செய்தியின் கதாநாயகன். சினிமாவில் வெற்றிப் படங்களை கொடுத்து இன்று சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கும் கதாநாயகன்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a53-223x300.jpg)
எந்த மொழி சினிமாவாக இருந்தாலும், ஒரு காலத்தில் ஓஹோன்னு இருந்த நடிகர், நடிகைகளின் புகலிடம் சீரியல் தான். இப்போது 'வெப் சீரிஸ்' என்ற சீரியலின் சக்களத்தியிடமும் புகலிடம் பெற்று வருகின்றனர்.
ஆனால், கோடிக்கணக்கான இல்லத்தரசிகள் தினம் தங்கள் கண்களை அடகு வைக்கும் தொலைக்காட்சிகளுக்கு இல்லாத மதிப்பா, தம்மா துண்டு மொபைலில் பார்க்கப்படும் வெப் சீரிஸ்க்கு கிடைக்கப் போகிறது!!
ரசிகர்களை பயமுறுத்தாமல் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பிடித்த பாம்பு சீரியல்
அதனால் தான் நடிகர், நடிகைகள் டிவிக்களை நோக்கி செல்கின்றனர்.
அந்த வழியில் தன்னை சின்னத் திரையுலகத்திற்குள் நுழைத்திருப்பவர் ஜெய் ஆகாஷ். தெலுங்கில் ஏங்கப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கும் ஜெய் ஆகாஷின் இயற்பெயர் சதீஷ் நாகேஸ்வரன். லண்டனைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான இவரின் சாக்லேட் பாய் முகத்தை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடினர்; ஆனால் தமிழ் ரசிகர்கள் ஏற்கவில்லை.
தெலுங்கில் ராமோஜி ராவ் இவரை வைத்து தயாரித்த 'ஆனந்தம்' திரைப்படம் வசூலை குவித்தது. நமது தமிழ் படங்களின் ஷூட்டிங்-லாம் நடக்கும், ராமோஜி ஃப்லிம் சிட்டி ஓனர் தான் ராமோஜி ராவ். அவ்ளோ பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் அடித்தடுத்து நடித்து ஹிட் கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் ஜெய் ஆகாஷ்.
தமிழ் சினிமாவில் என்னென்னமோ செய்து பார்த்துவிட்டார். தானே கை காசு போட்டும் நடித்து பார்த்துவிட்டார். ஆனால், தமிழ் ரசிகர்கள் இவரை ஏற்கவில்லை.
பறந்து போன பறவைகள் : சன் டிவி-யை தாங்கிப் பிடிக்கும் தற்போதைய ’ஆங்கர்கள்’ இவர்கள் தான்!
பெரிய திரை என்பதால் தானே, என்னை தேடி வந்து பார்க்க மாட்டேங்குறீங்க... சின்ன திரைன்னா என்னை நீங்க கட்டாயமா பார்த்து தானே ஆகணும்-ங்கற லாஜிக்கை இத்தனை வருடங்கள் கழித்து கண்டறிந்து, ஜீ தமிழ் வாயிலாக தொலைக்காட்சிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
'நீ தானே எந்தன் பொன்வசந்தம்' எனும் காதல் ததும்பும் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். நேற்று (பிப்.24) முதல் இதன் ஒளிபரப்பு தொடங்கிவிட்டது.
ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் செகண்ட் இன்னிங்ஸ் ப்ரோ!!!