காபியில் ஒரு ஸ்பூன் நெய்... 'மிஸ்டர் மெட்ராஸ்' சரத்குமார் டெய்லி டயட் இதுதான்!

ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஏபிசி ஜூஸ், பல நன்மைகளைக் கொண்டது. விட்டமின்கள், தாதுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
diet

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னனி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் சிறந்து விளங்குபவர் சரத்குமார். இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடிபில்டராகவும் இருப்பவர். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் பல படங்கள் நடித்துள்ளார். இவர் முன்னால் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். 

Advertisment

சரத்குமார் இந்த அளவிற்கு ஆரோக்கியமாகவும் , உடம்பு பிட்னஸ் ஆக காரணம் உடற்பயிற்சி தான் . இவர் அந்தக் காலத்திலேயே உடற்பயிற்சிகளை ஒழுங்கான முறையில் மேற்கொண்டு உடல் கட்டுக்கோப்புடனும், உடல் ஒருங்கிணைப்பாகவும் வைத்திருந்தவர். அதுமட்டுமில்லாமல் சரத்க்குமார் 1974-ம் ஆண்டு அதாவது 20 வயதிலே மிஸ்டர் மெட்ராஸ் (சென்னை ஆணழகன்) என்ற போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தையும் வென்றார். அந்த காலத்திலேயே ‘மிஸ்டர் மெட்ராஸ்’ பட்டம் வென்றவர்.

டயட்

தற்போது இவருடைய ‘மிஸ்டர் மெட்ராஸ்’ புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது மட்டுமில்லாமல், இவர் அன்று முதல் இன்று வரை உடல் நலம் குறித்து உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருவார். 

Advertisment
Advertisements

அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்த நடிகர் சரத்குமார், தனது தினசரி டயட் உணவுகளை பகிர்ந்தார். அதில், காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடித்துவிட்டு, பிளாக் காபியில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிடுவாராம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவிட்டு 9 மணியளவில் 4 முட்டைகளின் வெள்ளைக்கருவை வேகவைத்து சாப்பிடுவாராம். பிறகு 11 மணியளவில் ஏ.பி.சி எனப்படும் ஆப்பிள் பீட்ரூட் கேரட் போட்டு ஜூஸ் குடிப்பாராம்.மதிய உணவிற்கு இரண்டு பீஸ் சிக்கன் மற்றும் சில காய்கறிகளுடன் முடித்து கொண்டு வேற எதுவும் எடுத்து கொள்ள மாட்டாராம். மலை சிற்றுண்டியாக அவல் சாப்பிட்ட பிறகு டின்னருக்கு ஒரு 7 மணி அளவில் சூப்புடன் அன்றைய தினத்தை முடித்து கொள்வாராம். 

ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஏபிசி ஜூஸ், பல நன்மைகளைக் கொண்டது. இந்த சாற்றில் விட்டமின்கள், தாதுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. இது தவிர சருமத்தை பளபளப்பாக்குவதற்கும், இரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும், இதய ஆரோக்யத்தை மேம்படுத்துவதற்கும் இது பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், இரும்பு போன்ற சத்துகளும் நிறைந்துள்ளன.

Food Sarath Kumar diet

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: