தல, தளபதியுடன் ஒரே ஃபிரேமில் நடித்த ஜெனிஃபர் – இன்று ‘ஆல் இன் ஆல்’ அழகுராணியாக!

இந்த படத்தில் ஒரு வாரம் படப்பிடிப்பு முடிந்தபின் தல-யால் நடிக்க முடியவில்லை. ஆனால் தல மற்றும் தளபதியுடன் ஒரு படம் எனக்கு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்

By: Updated: March 25, 2020, 12:23:33 PM

விஜய் படங்களில் தங்கச்சி செண்டிமெண்ட் என்றாலே எப்போதும் ஒரு பிணைப்பு இருக்கும், ஈர்ப்பு இருக்கும். இதர படங்களில் காணும் விஜய்யை விட தங்கை படங்களில் விஜய்யிடம் கூடுதல் சென்டிமெண்ட்டை காண முடியும். காரணம் அனைவருக்கும் தெரியும்.

அதுபோன்று, விஜய்யின் தங்கையாக கில்லி படத்தில் படித்து ரசிகர்களின் பேரன்பை பெற்றவர் நடிகை ஜெனிஃபர். ஆனால், அதற்கு முன்பாகவே விஜய்யுடன் நேருக்கு நேர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

’இந்த வயதிலும் ஃபிட்டாக இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ’ ரஜினியை புகழ்ந்த பியர் கிரில்ஸ்

இந்நிலையில், ஜெனிஃபர் தற்போது பகிர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று அஜித் – விஜய் ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது.

அதற்கு முன்பாக விஜய் ஸ்டைலில் ஒரு குட்டிக் கதையை தெரிந்து கொள்ளுங்கள்,,,

வசந்த் இயக்கிய ‘நேருக்கு நேர்’ படத்தில் தான் சூர்யா முதன் முதலாக திரையுலகில் அறிமுகம் ஆனார். இன்று சூர்யா அடைந்திருக்கும் உச்சத்துக்கு வித்து இந்த நேருக்கு நேர் படம் தான். இப்படத்தில் ஜெஃபரின் மாமா ரோல் சூர்யாவுக்கு. சித்தப்பா ரோல் விஜய்க்கு.

ஆனால், முதன் முதலாக மாமா ரோலில் கமிட்டானவர் அஜித் தான். படத்தில் அதிகாரப்பூர்வமாக கமிட் ஆகி, 15 நாட்கள் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டார் அஜித். ஆனால், சில காரணங்களுக்காக அஜித் அப்படத்தில் இருந்து விலகிக் கொள்ள, அதன் பிறகே, சிவகுமார் மகனை நடிக்க வைக்கலாமே என்று முடிவெடுக்கப்பட்டு, சூர்யா அந்த புராஜெக்ட்டில் கொண்டுவரப்பட்டார்.

’இந்த வயதிலும் ஃபிட்டாக இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ’ ரஜினியை புகழ்ந்த பியர் கிரில்ஸ்

இப்போது மேட்டருக்கு வருவோம்…

நடிகை ஜெனிஃபர், அஜித்துடன் நேருக்கு நேர் படத்தில் இணைந்து நடித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அஜித், ஜெனிஃபரை தூக்கி வைத்திருக்கிறார். உடன் விஜய் அஜித்தை கோபமாக பார்த்து நின்றுக் கொண்டிருப்பது போன்று காட்சி இடம் பெற்றுள்ளது.


இதனை பகிர்ந்த ஜெனிஃபர், “தல, தளபதியுடன் ஒரே ஃபிரேமில் இருக்கும் இந்த தருணம் தான் என் வாழ்வில் மிகச் சிறந்த தருணம். ஆமாம், இந்த படத்தில் ஒரு வாரம் படப்பிடிப்பு முடிந்தபின் தல-யால் நடிக்க முடியவில்லை. ஆனால் தல மற்றும் தளபதியுடன் ஒரு படம் எனக்கு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் .. இது எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது என்னை ஒரு நடிகையாக தனித்து நிற்க வைத்தது மட்டுமல்லாமல், சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான 13 விருதுகளையும் வெல்ல காரணமாக அமைந்தது. 1997 ஆம் ஆண்டு STATE AWARD உட்பட … என்னைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன் என்று நினைக்கிறேன்” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.


1991ம் ஆண்டு கிழக்கு கரை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெனிஃபர் தமிழில் மட்டும் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தவிர கேளடி கண்மணி, வள்ளி போன்ற மக்கள் வரவேற்பு பெற்ற சீரியல்களிலும் ஜெனிஃபர் நடித்திருக்கிறார்.

நடிப்பது மட்டுமின்றி, மேக் அப் ஆர்டிஸ்ட்டாகவும் ஜெனிபர் பணிபுரிந்து வருவது ரசிகர்கள் பலரும் தெரியாத ஒரு தகவலாகும். தனியாக ஒரு யூடியூப் சேனல் வைத்து, டூர் அட்வைஸ்ஸும் கொடுத்து வருகிறார் இந்த ஆல் இன் ஆல் அழகுராணி ஜெனிஃபர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Actress nancy jennifer shares nerukku ner movie photo with ajith and vijay

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X